ஊகத்துக்கு இடமளித்து வேடிக்கை பார்க்கிறார் நஜிப்

najibஉங்கள் கருத்து ‘நஜிப் அவர்களே, உங்கள் உருமாற்றத் திட்ட இலக்குகளைச் சில மாதங்களில் அல்லது சில வாரங்களிலேயே  அடைய முடியும் என்கிறீர்களா?”

நஜிப்: உருமாற்றத் திட்டங்கள் வெற்றி பெற்ற பின்னரே 13வது பொதுத் தேர்தல்

ஜே டான்: மறுபடியும் அதேதான்; தேர்தல் தேதி தள்ளிப் போய்விட்டது. ஏதோ திட்டமிடுகிறார்கள்,ஐயா. மாற்றரசுக் கட்சிக்கு வாக்காளர்கள் ஆதரவு பெருகி வருவதைக் கண்டு அதை எதிர்ப்பது எப்படி என்று ஆலோசிக்கிறார்கள் போலும்.

வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க நாடு திரும்புவார்கள் என்பதால் கள்ள வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடலாம். அல்லது, தேர்தல் தேதியை மூடுமந்திரமாக வைத்திருந்தால் விமானப் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்ய முடியாமல் தடுமாறிப் போவார்கள் அன்று நினைக்கலாம்.

பெயரிலி _40f4: பிரதமர் நஜிப், ஊகத்துக்கு இடமளித்து வேடிக்கை பார்க்கிறார். பொறுப்பான அரசு என்றால் அதன் குடிமக்களை இப்படி திரிசங்கு நிலையில் விட்டு வேடிக்கை பார்க்காது.

மூத்த குடிமகன்: நஜிப் அவர்களே, இது உங்கள் தனிப்பட்ட நிறுவனமல்ல. உங்களுக்கு மட்டுமே சொந்தமான சொத்துமல்ல. தேர்தல்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதி. அதற்குத் தயாராக இல்லை என்பதற்காக அதையும் இதையும் சொல்லிக் காலம் கடத்த வேண்டாம்.

‘ரூமா பெர்டானா’விலேயே இருக்கும் ஆசை வந்துவிட்டதா? அந்த அதிகாரப்பூர்வ இல்லம்கூட உங்கள் சொத்தல்ல. ஆட்சியில் உள்ளவரைதான் அதில் இருக்க முடியும். அமெரிக்க அதிபரே ஆனாலும் பதவிக் காலம் முடிந்ததும் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற வேண்டியதுதான்.

அதிகாரம் என்பதும் நிரந்தரமானது அல்ல. அதற்கும் ஒருநாள் முடிவு உண்டு.

பெயரிலி #43051382: மக்கள் பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவாக இருப்பதைக் கண்டு அரண்டு போயுள்ளது பிஎன்.

முஷிரோ: இவ்வளவு காலத்துக்குப் பின்னரும் தம் அரசாங்கத்தின் சாதனை என்று எதையும் காண்பிக்க முடியாமல் இருந்தால் நஜிப்புக்கு அது பெரிய தோல்விதான்.

நஜிப்பின் கூற்று தேசிய உருமாற்றத் திட்டங்கள்கூட இதுவரை வெற்றி தரவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாக உள்ளது. இதுவரை வெற்றியைத் தராத உருமாற்றத் திட்டங்கள் அடுத்த சில வாரங்களில் வெற்றியைக் கொண்டு வந்து விடுமா?

டிம்: பிரதமர் உருமாற்றத் திட்டங்கள் பற்றி அல்ல ஆட்சிமாறுவதை எண்ணித்தான் கலக்கமடைந்துள்ளார்  என்று நினைக்கிறேன். வணிக வட்டாரத்தில் அனுபம் உள்ளவன் நான், நாடு பின்னோக்கிச் செல்வதைத்தான் காண்கிறேன்.

அமைச்சர்கள் தலைமைச் செயலாளர்கள் என காணும் இடமெல்லாம் ஊழலைத்தான் காண்கிறேன். ஆதாரங்களுடன் புகார் கூறினாலும்கூட மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த்தால் எதுவும் செய்ய முடியவில்லை.

பிரதமர் அவர்களே, உங்கள் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இல்லை. ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.

பெயரிலி: என்ன உருமாற்றம்? ரொக்க அன்பளிப்பு கொடுப்பதும் தள்ளுபடி கொடுப்பதும் உருமாற்றம் அல்ல.

உருமாற்றம் என்றால் அரசை மாற்றி அமைப்பது. மலேசியர்கள் 13வது பொதுத் தேர்தலில் அதைத்தான் செய்யப்போகிறார்கள்.

TAGS: