‘சில பலவீனங்கள் இருந்தாலும் பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்

pakatan‘எல்லா நிலைகளிலும் மக்களை மய்யமாகக் கொண்ட அரசாங்கத்தை நாங்கள் நாடுகிறோம். அம்னோ சேவகர்களை மய்யமாகக் கொண்ட அரசாங்கத்தை அல்ல’

‘கொள்கை அறிக்கை ஏகபோக உரிமைகளுக்கு முடிவு கட்டுகின்றது பொருளாதாரத்துக்கு ஆக்கமூட்டுகின்றது’

ராஜா சூலான்: நான் அந்த தேர்தல் கொள்கை அறிக்கை முழுவதையும் படித்துப் பார்த்தேன். உண்மையில் நன்கு எழுதப்பட்ட கொள்கை அறிக்கை ஆகும். பக்காத்தான் ராக்யாட்டுக்கு  பெரும்பான்மை வாக்காளர்கள் ஒரு வாய்ப்புக் கொடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.

கடந்த 55 ஆண்டுகளாக அம்னோ/பிஎன் ஆட்சி புரிகிறது. நாடு இப்போது இருக்கும் நிலையை நான் கண்கூடாகக் காண்கிறோம். ஒரு தவணைக் காலத்துக்கு பக்காத்தானுக்கு வாய்ப்புக் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என நான் எண்ணுகிறேன்.

பக்காத்தான் ஆட்சி பொறுப்பை ஏற்ற முதல் நாளன்று அது செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது நிறைவேற்றப்பட்டால் அதுவே போதுமானது.

முன்னேற்றம்: கடந்த காலத்தைப் போல அல்லது புக்கு ஜிங்காவில் உள்ளதைப் போல இல்லாமல் இந்த தேர்தல் கொள்கை அறிக்கை இந்த நாட்டை ஆளுவதற்கு பக்காத்தானுக்கு நிறைவான சான்றிதழை வழங்குகின்றது.

அது முழுமையானது, நன்கு சிந்தித்த பின்னர் உருவாக்கப்பட்டது, நாட்டின் நாடி நரம்புகளை உணர்ந்துள்ளது.  உண்மையில் அதனைப் படித்த போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்.  புத்ராஜெயாவுக்கு நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

அபாசிர்: எல்லா நிலைகளிலும் மக்களை மய்யமாகக் கொண்ட அரசாங்கத்தை நாங்கள் நாடுகிறோம். இது வரை இயங்கி வரும் அம்னோ சேவகர்களை மய்யமாகக் கொண்ட அரசாங்கத்தை அல்ல.

நாங்கள் உண்மையில் சுதந்திரமாக இயங்கும் ஊழல் தடுப்பு நிறுவனத்தை, போலீஸ் படையை விரும்புகிறோம்.  அவை நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பேற்க வேண்டுமே தவிர உள்துறை அமைச்சருக்கு அல்ல. ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கு வழி கோலும் அரசாங்கமே தேவை. அந்த அரசாங்கம் சாதாரணப் பிரஜைகளுடைய அன்றாட வாழ்க்கையை எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற வேண்டும்.

அந்த அரசாங்கம் மக்கள் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். சுயநலனை மய்யமாகக் கொண்டு இயங்கும் அம்னோவிடமிருந்தும் அதன் சேவகர்களிடமிருந்தும் நமக்கு அவை கிடைக்காது.

பிஸாவ்: உண்மையாகச் சொன்னால் யாரும் தேர்தல் கொள்கை அறிக்கைகளைப் படிப்பதில்லை. அம்னோ பணக்காரர்களுக்கு பக்கத்தான் ஏழைகளுக்கு. அதாவது பக்காத்தான் தலைவர்கள் bushjacket அணிந்த அம்னோ கோமாளிகளைப் போல மாறும் வரை.

கலா: தொலைவில் புதிய உதய சூரியனைக் காண்கிறோம். சுருக்கமாகச் சொன்னால் அதிகாரத்துக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை பக்காத்தான் அந்த கொள்கை அறிக்கையில் விளக்கியுள்ளது. எல்லா வகையான ஏகபோக ஆதிக்கங்களையும் புரவலர் நடவடிக்கைகளையும் ஒழித்துக் கட்ட அது எண்ணியுள்ளது.

உண்மையில் அது நிகழ்ந்தால் அதிகார வர்க்க, சேவகர், புரவலர் அரசியலுக்கு முடிவு கட்டப்படும். என்றாலும் இப்போது அத்தகைய அரசியல் மூலம் நன்மை பெறுகின்றவர்கள் எளிதாக தாங்கள் கொள்ளையடித்ததை கொடுக்கப் போவதில்லை. அதற்கு பக்காத்தான் ஒரு தீர்வு காணுவோம் என நம்புவோம்.

இல்லை என்றால் அந்தக் கொள்ளைக்காரர்கள் தீய வழியில் தேடிய செல்வத்தை கண்டு பிடிக்க நிறைய வளங்களைச் செலவு செய்ய வேண்டியிருக்கும். (மார்க்கோஸ் சூறையாடியதை கண்டு பிடிக்க பிலிப்பீன்ஸ் செய்ததைப் போல).

லயன்கிங்: ‘என்னை நம்புங்கள், ‘நம்பிக்கை’, ‘எனக்கு இன்னொரு தவணைக் காலத்துக்கு அதிகாரம் கொடுங்கள்’ என்பதைத் தவிர வேறு ஒன்றும் பிஎன் -னிடமிருந்து வரவில்லை. ஊழல், குற்றச் செயல்கள், பொருளாதாரம், கல்வி, மக்களுடைய தேவைகள் பற்றி எதுவுமே இல்லை.

இனவாத எதிர்ப்பாளன்: வழக்கம் போல பக்காத்தான் கொள்கை அறிக்கை ஒதுக்கப்பட்டுள்ள இந்தியர்களைப் புறக்கணித்துள்ளது. அதில் நாடற்ற இந்தியர்கள் பற்றி சொல்லப்படவே இல்லை. மலாய், சீன, சபா, சரவாக் சுதேசி மக்கள், ஒராங் அஸ்லி மக்கள் உட்பட ஒவ்வொரு சமூகமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.

அது சீனர்களுக்காக UEC என்ற ஐக்கிய தேர்வுச் சான்றிதழை அங்கீகரித்துள்ளது. பெல்டா குடியேற்றக்காரர்களுடைய சிறப்பு நலன்கள் பாதுகாக்கப்படும். 2008ல் பக்காத்தானுக்கு இலவசமாகக் கிடைத்த இந்தியர் வாக்குகள் இனிமேல் அதற்குக் கிடைக்கக் கூடாது.
ஜெரோனிமோ: இது எல்லாம் சதுரங்க ஆட்டம் தான். அரசருக்கும் (நஜிப்) அரசிக்கும் (ரோஸ்மா) பக்காத்தான் பல முறை ‘check’ வைத்தது. ஆனால் யானைகள் (நீதித் துறை), ஆயர்கள் (முப்திகள்), வீரர்கள் (போலீஸ்) என பல பகடைகள்  இருந்ததால் அவர்கள் பிடிபடாமல் தப்பித்துக் கொண்டு வந்தனர்.

ஆனால் 13வது பொதுத் தேர்தல் அவர்களுக்கு இறுதி checkmate ஆகும்.

 

TAGS: