பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் முன்னாள் அம்னோ பொருளாளருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்

azimFiscal Capital Sdn Bhd என்ற நிறுவனத்தின் வழியாக 60 பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் முன்னாள் அம்னோ தலைமைப் பொருளாளர் அப்துல் அஸிம் முகமட் ஜாபிடிக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றின் மீது ஆறு தொலைத் தொடர்பு switch-களை கொள்முதல் செய்ததில் ஏமாற்றியதாகவும் மோசடி செய்ததாகவும் ஆவணங்களைப் போலியாக தயாரித்தததாகவும் 12 மில்லியன் ரிங்கிட் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கமருல் ஹிஷாம், ஹஸ்னால் ரெசுவா வழக்குரைஞர் அலுவலகம் மூலம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 20ம் தேதி அந்த வழக்கை பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் சமர்பித்தனர்.

2011ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி அந்த முதலீட்டாளர்கள் போலீசில் புகார் செய்தனர் என்றும் ஆனால் போலீஸ் நடவடிக்கை மெதுவாக இருப்பதாக அவர்கள் புகார் செய்தனர் என்றும் அம்பாங் எம்பி சுராய்டா கமாருதின் கூறினார்.

அந்த விவகாரம் மார்ச் 21ம் தேதி வழக்கு நிர்வாகத்துக்கு வரும் என வழக்குரைஞர் கமருல் ஹிஷம் கமருதின் கூறினார்.

அந்த முதலீட்டாளர்கள் Doxport Technology (M) Sdn Bhd-டையும் அதன் இயக்குநர்களான அப்துல் அஸிமையும் குர்மித் கோர்-ரையும் சிவலிங்கம் தட்சிணாமூர்த்தியையும் அந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அப்துல் அஸிம் Doxport Technology நிறுவனத்தின் தலைவரும் ஆவார்.

பாதிக்கப்பட்டவர்கள் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளிடமும் புகார் செய்துள்ளனர். அவர்களில் ரோத்தர்ஹாமின் அகமட் பிரபுவும் ஒருவர் ஆவார். அவர் அடுத்த மாதம் பிரபுக்கள் சபையில் அந்த விவகாரத்தை எழுப்புவார்.

 

TAGS: