சபா, லஹாட் டத்துவிலும் செம்போர்ணாவிலும் எட்டு மலேசிய பாதுகாப்பு படை வீரர்களைக் கொன்ற ஆயுதமேந்திய சுலு ஊடுருவல்காரர்களை பயங்கரவாதிகள் என மலேசியா கருதுகின்றது. அந்தக் கருத்தை பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சர் அல்பர்ட் எப் டி ரொஸாரியாவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
“அந்தக் கும்பலை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதை அமைச்சர் ரொஸாரியோவும் ஒப்புக் கொள்கிறார்,” என வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சபா நகரங்களில் நிகழும் சம்பவங்கள் பற்றியும் மாற்றங்கள் பற்றியும் விவாதிப்பதற்காக அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு மலேசியத் தலைநகரில் சந்தித்தனர்.
“சுலு கும்பல் சரணடைந்து, பிலிப்பின்ஸில் உள்ள தங்கள் வீடுகளுக்கும் குடும்பங்களுக்கும் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிலிப்பின்ஸ் அரசாங்கத்தையும் அதிபர் பெனிக்னோ அக்கினோவையும் மலேசியா பாராட்டுகிறது,” என அனீபா மேலும் தெரிவித்தார்.
“அந்த வேண்டுகோளை அலட்சியம் செய்ததோடு நிராகரிக்கவும் செய்தது,” என அவர் குறிப்பிட்டார்.
ஊடுருவல்காரர்களுடைய நடவடிக்கைகள் குறித்து பிலிப்பின்ஸ் அரசாங்கம் வருத்தம் அடைந்துள்ளதாகவும் ரொஸாரியா சொன்னதாக அனீபா தெரிவித்தார்.
“கொல்லப்பட்ட மலேசிய வீரர்களுடைய குடும்பங்களுக்கும் மலேசியர்களுக்கும் அவர் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்,” என்றும் வெளியுறவு அமைச்சர் சொன்னார்.