லஹாட் டத்துவில் என்ன நடக்கிறது என்பது தொடர்பில் தெளிவான தளபத்திய இணைப்பு இல்லை என ஒய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் (ஒய்வு பெற்ற) முகமட் ஹஷிம் ஹுசேன் கூறுகிறார்.
அத்தகைய சூழ்நிலையில் தெளிவான தளபத்திய அமைப்பு முறை இருக்க வேண்டும் என் அவர் சொன்னார்.
“நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இப்போது அது அங்கு இல்லை என நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.
2002ம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகிய முகமட் ஹஷிம் நடப்பு களச் சூழ்நிலையைத் தெளிவாக மதிப்பீடு செய்வதும் அவசியம் என்றும் முகமட் ஹஷிம் சொன்னார்.
அதற்கு நேர்மாறாக பேராக் சவுக் சம்பவம் சரியான வீரர்களுடன் நான்கு நாட்களில் தீர்க்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
“அப்போது தெளிவான தளபத்திய இணைப்பு முறையும் தெளிவான ஆணைகளும், தெளிவான தளபத்தியமும் கட்டுப்பாடும் இருந்தன. அதே வேளையில் அந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குச் சரியான வீரர்களும் இருந்தார்கள்,” என முகமட் ஹஷிம் குறிப்பிட்டார்.
தாம் இன்று அதிகாரப்பூர்வமாக இன்று பிகேஆர் கட்சியில் சேருவதாகவும் அவர் அறிவித்தார். பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அவர் ஆதரவு தெரிவித்துக் கொண்டார்.
பாகிஸ்தானுக்கான முன்னாள் மலேசியத் தூதருமான முகமட் ஹஷிம், கோலாக் கங்சார் மலாய் கல்லூரியில் தமது சக மாணவரான அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவம் தம்மைக் கவர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
“பக்காத்தான் தலைவர்களிடம் சரியான தலைமைத்துவப் பண்புகள் இருப்பதை நான் காண்கிறேன். இராணுவச் செலவுகளில் விரயமும் கசிவும் காணப்படுவதாக முன்பு தமக்கு அடுத்த நிலையில் இருந்த லெப்டினட் ஜெனரல் அப்துல் காபிர் அப்துல் ஹமிட் கூறியதையும் நான் உறுதிப்படுத்துகிறேன்,” என்றார் முகமட் ஹஷிம்.