லஹாட் டத்து நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பிஎன் அரசாங்கம் விரைவாகவும், திறமையாகவும், உறுதியாகவும் செயல்படவில்லை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார்.
ஈராயிரத்தாவது ஆண்டு அல் மாவ்னா இயக்கம் சம்பந்தப்பட்ட சாவ்க் ஆயுதக் கொள்ளை சம்பவம் நான்கு நாட்களில் தீர்க்கப்பட்டது எனக் குறிப்பிட்ட அந்த பெர்மாத்தாங் எம்பி, லஹாட் டத்துவில் நேற்று தாக்குதல் நடத்தப்படும் வரையில் 23 நாட்களுக்கு அந்நிய ஊடுருவல்காரர்கள் அதனை ஆக்கிரமித்திருந்தனர் என்றார்.
“அந்தத் தீவிரவாதிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்த இராணுவத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல கேள்விகள் எழுந்துள்ளன.”
“அந்த தவறுக்கு பிஎன் தலைமைத்துவமே காரணம். அறிக்கைகள் எங்கே; உத்தரவுகள் என்ன ? 23 நாட்கள் ஏன் காத்திருக்க வேண்டியிருந்தது ?”
“நாங்கள் லஹாட் டத்துவில் மட்டுமின்றி சபாவிலும் அமைதி ஏற்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம்,” என்றும் அன்வார் சொன்னார்.