லஹாட் டத்துவில் மோதல் நிகழ்ந்த பகுதிக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று வருகை புரிவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கம்ப்போங் தண்டுவோ மீது பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்திய இரண்டு நாளைக்குப் பின்னர் அவர் அங்கு செல்கிறார்.
“Ops Daulat நடவடிக்கையை நேரில் காண பிரதமர் விரும்புகிறார். போலீசிலும் இராணுவத்திலும் உள்ள நமது வீரர்களுடைய உணர்வுகளுக்கு உற்சாகமூட்டவும் அவர் விரும்புகிறா,” எனத் தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடி இன்று கூறினார்.
என்றாலும் நஜிப் வந்து சேரும் நேரமும் இடமும் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைத்திருக்கப்படும் என்று லஹாட் டத்துவில் பெல்டா சஹாபாட் இல்லத்தில் ஸாஹிட் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தாக்குதல் நிகழ்ந்த இடத்துக்கு நஜிப் செல்வாரா என வினவப்பட்ட போது உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இவ்வாறு பதில் அளித்தார்: “அவர் எங்களுக்குத் தெரியப்படுத்துவார்.”