நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே பராமரிப்பு அரசு

ec

2008, மார்ச் 8 பொதுத் தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் ஆவதால் இன்று முதல் பராமரிப்பு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்படுவதைத் தேர்தல் ஆணையம் (இசி) ஏற்கவில்லை.

சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே ஆளும்கட்சி பராமரிப்பு அரசாங்கம் ஒன்றை அமைத்து பொறுப்பேற்கும் என்று இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் ஒமார் கூறினார்.

ec1மூத்த வழக்குரைஞர்  தோமி தாமஸ் இன்றுமுதல் பிஎன் ஒரு பராமரிப்பு அரசுதான் என்று கூறியிருப்பதற்கு எதிர்வினையாற்றிய வான் அஹ்மட் (இடம்) இவ்வாறு கூறினார்.

தோமி தாமஸின் கருத்தையே டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்கும் எடுத்துரைத்தார். லாஹாட் டத்து விவகாரம் போன்றவற்றில் மாற்றரசுக் கட்சியுடனும் பிஎன் ஆலோசனை கலக்க வேண்டும் என்றாரவர்.

கருத்துச் சொல்லும் உரிமை எல்லாருக்குக் உண்டு என்று வான் அஹ்மட் கூறினார்

தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு பராமரிப்பு அரசு பற்றியும் பரிந்துரைத்துள்ளது என்றும் அப்பரிந்துரைகளை அரசாங்கத்துக்கும் சட்டத்துறை தலைவர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

அப்படியே, பராமரிப்பு அரசுக்கான வழிகாட்டு விதிகளும் ஒழுக்க விதிகளும் முடிவு செய்யப்பட்டாலும் அவற்றைச் சட்டமாக்கிச் செயல்படுத்த இயலாது.

அப்படிப்பட்ட நிலையில் வழிகாட்டு விதிமுறைகளையும் ஒழுக்கவிதிகளையும் மீறுவது சட்டமீறலாகாது என்றும் வான் ஒமார் கூறினார்.