என் தந்தை அன்வார் அரசியலுக்கு பலியாகி விட்டார் என சைபுல் கூறுகிறார்

anwarஎதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்,  தமது அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தமது தந்தை அஸ்லான் முகமட் லாஸிமைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் கூறுகிறார்.

தமது தந்தையின் நடவடிக்கை குறித்து தாம் வருத்தம் அடைந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

நேற்று தமது தந்தை தெரிவித்த விஷயங்களை மறுத்த 26 வயது சைபுல், அன்வாருக்கு எதிரான தமது குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ளப் போவதில்லை என வலியுறுத்தினார்.

“நான் அந்தக் குற்றச்சாட்டிலும் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்திலும் உறுதியாக இருக்கிறேன். நான் பள்ளிவாசலிலும் சத்தியம் செய்திருக்கிறேன்.”

“திருந்துமாறு நான் அன்வாரைக் கேட்டுக் கொள்கிறேன். ஐந்து ஆண்டுகளாகி விட்டன. அது சிரமமாக இருந்தாலும் நான் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் செய்ததற்கு அல்லாஹ், உங்களை (அன்வாரை) தண்டிப்பார். நீங்கள் உண்மையில் விரக்தி அடைந்துள்ளீர்கள்,” என சைபுல் சொன்னார்.anwar1

“நான் அன்வாரை எச்சரிக்க விரும்புகிறேன். நீங்கள் விரக்தி அடைந்திருந்தாலும் உங்கள் நோக்கத்தை அடைவதற்காக நிலைமையைத் திசை திருப்ப தயவு செய்து என் தந்தையைப் பயன்படுத்த வேண்டாம்.”

உண்மை இறுதியில் வெற்றி பெறும்,” என நேற்று மாலை தமது வழக்குரைஞர் அலுவலத்தில் சைபுல் நிருபர்களிடம்  கூறினார்.

நேற்று காலலயில்  60 வயதான அஸ்லான் முகமட் லாஸிம், பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் குதப்புணர்ச்சி வழக்கு ll என அழைக்கப்பட்ட வழக்கில் அன்வார் மீது அவதூறு சொல்வதற்குப் பிரதமரது அதிகாரி ஒருவர் உட்பட பொறுப்பற்ற தரப்புக்களினால் தமது புதல்வர் பயன்படுத்தப்பட்டாகவும் கூறிக் கொண்டார்.

“அன்வார் நிரபராதி அவதூறுக்கு இலக்கானவர்… ஆகவே நான் அன்வாரிடமும் அவரது குடும்பத்தாரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.