சாபா சச்சரவால் நஜிப்புக்கு மேலும் சிக்கல் என்கிறது அறிக்கை

1bankசாபாவில் சூலு சுல்தானின் ஆதரவாளர்களுக்கும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்குமிடையிலான சண்டையால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மக்கள் செல்வாக்கும் பொதுத் தேர்தலில் அவரது வெற்றியும் பாதிக்கப்படலாம் என்று  Bank of America Merrill Lynch (BofAML) கூறுகிறது.

1bank1மார்ச் 7-இல் வெளியிடப்பட்ட அதன் ஆய்வறிக்கை, ஜனவரியிலிருந்து  பிப்ரவரிவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மலாய்க்காரரிடையே பிஎன்னுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக “அதிருப்தி” அதிகரித்ததன் விளைவாக நஜிப்புக்கிருந்த மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளதாகக் கூறுகிறது.

“தீர்வுகாணப்படாமல் தொடரும் சாபா ஊடுருவல்  நஜிப்புக்கு மேலும் சிக்கலை உண்டு பண்ணலாம். சாபா, பிஎன்னின் கோட்டைகளில் ஒன்று. 12வது பொதுத் தேர்தலில் சாபாவும் சரவாக்கும் சேர்ந்து பிஎன்னுக்கு நாடாளுமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பங்கை  வழங்கின”, என்று அப்பொருளகம் கூறிற்று.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, சாபா விவகாரத்தால் 13வது பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளது.

பக்காத்தானுக்கு வெற்றிவாய்ப்பு

பொதுத் தேர்தலால் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதியற்ற நிலையின் விளைவாக அந்நிய முதலீட்டாளர்கள் கடன்பத்திரச் சந்தையின் பக்கமாகத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். உள்நாட்டு முதலீட்டாளர்களிடையே பங்குச் சந்தையைவிட்டு  விலகிச் செல்லும் போக்கு காணப்படுகிறது.

வெளிநாணயச் சந்தையிலும் பங்குச் சந்தையிலும் அண்மைய விலை ஏற்ற இறக்கங்களைப் பார்க்கையில் முதலீட்டாளர்களின் போக்கு மாற்றரசுக் கட்சிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதைக் காண்பிப்பதுபோல் தெரிகிறது என அது கூறியுள்ளது.

– InterAksyon