சுலு சுல்தான் பேராளர் : அஸ்ஸிமுடி இன்னும் சபாவில் இருக்கிறார்

fieldசபா மீதான தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அந்த பிரதேசத்திற்குள் ஊடுருவிய ராஜா மூடா அஸ்ஸிமுடி கிராம் இப்போது எங்கு இருக்கிறார் என்பது மீது மலேசிய அதிகாரிகளும் சுலு சுல்தான் பிரதிநிதிகளும் முரண்பாடான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சுலு சுல்தானின் பட்டத்து இளவரசருமான அஸ்ஸிமுடி தமது ஆதரவாளர்களைக் கைவிட்டு விட்டு பிலிப்பின்ஸுக்குத் திரும்பி விட்டதாக நேற்று பெர்னாமா தகவல் வெளியிட்டிருந்தது.

அஸ்ஸிமுடி “தமது ஆதரவாளர்களைக் கைவிட்டு விட்டு தாயகத்திற்கு ஒடி விட்டார்” என ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனர சுல்கெப்லி முகமட் ஜின் சொன்னதாக தி ஸ்டார் நாளேடும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே களத்தில் உள்ள தளபதிகள் வழங்கும் அறிக்கைகள் அடிப்படையில் அஸ்ஸிமுடி சபாவில் தமது குழுவுடன் இல்லை என தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரும் மலேசியப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்.field1

ஆனால் இன்று அந்த சுல்தானுடைய பேச்சாளரும் தலைமைச் செயலாளருமான அப்ராஹாம் இட்ஜிராணி அந்தத் தகவல்களை மறுத்துள்ளதுடன் மலேசியத் தேர்தல்கள் நெருங்குவதால் ‘பிரச்சாரத்திற்காக’ அவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

நேற்று தாம் அஸ்ஸிமுடியுடன் பேசியதாகவும் பட்டத்து இளவரசர் இன்னும் சபாவில் இருப்பதாகவும் இட்ஜிராணி தெரிவித்தார்.

13வது பொதுத் தேர்தலுடன் சபா நெருக்கடியை இணைக்கும் முயற்சி

சபா நெருக்கடியை வரும் பொதுத் தேர்தலுடன் இணைப்பதற்கு ஆளும் அம்னோ முயற்சி  செய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

field2“தேர்தல் நடைமுறையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாட்டை குழப்பத்தில் மூழ்கடிப்பது” அஸ்ஸிமுடி மற்றும் அவரது ஆதரவாளர்களுடைய நோக்கம் என அம்னோவுக்கு சொந்தமாஜ உத்துசான் மலேசியா கூறிக் கொண்டுள்ளது.

தேர்தல்களுக்கு இடையூறு செய்வதற்காக ஒழுங்கைச் சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் விரும்புவதாக துணைப் பிரதமர் முஹைடின் யாசின் குற்றம் சாட்டியுள்ளதாகவும் பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.

பிலிப்பின்ஸில் மே மாதம் மத்திய தவணைக் காலத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. சுல்தான் ஆதரவாளர்கள் சபாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பின்னணியில் ‘சதித் திட்டம்’ இருப்பதாக அதிபர் பெனிக்னோ அக்கினோவும் கூறியிருக்கிறார்.

இண்டர்அக்சன்