தியான் சுவாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன

chuaபிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன.

கெடா லுனாஸில் நேற்றிரவு பத்து அன்னாம் பிஎன் நடவடிக்கை மய்யத்துக்கு அருகில் 100 இளைஞர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பட்டம் செய்தனர்.

இரவு 11 மணி வாக்கில் செராமா நிகழும் இடத்தை சென்றடைந்த தியான் சுவா மீது அவர்கள் வசைச் சொற்களை கூறினர்.

அவர்கள் ஹிம்புன் என்னும் சொல் பொறிக்கப்பட்டிருந்த சிவப்பு நிற டி சட்டையை அணிந்திருந்தனர்.

பெரும் எண்ணிக்கையில் போலீஸ்காரர்களும் பாஸ் பாதுகாப்பு ஊழியர்களும் நிறுத்தபட்டிருந்ததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் செராமா நிகழும் இடத்துக்கு அருகில் செல்ல முடியவில்லை.chua1

300 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் தியான் சுவா உரை நிகழ்த்த தொடங்கிய 15 நிமிடங்களுக்குப் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். பிஎன் நடவடிக்கை மய்யமும் மூடப்பட்டது.

லுனாஸில் ஆர்ப்பாட்டம் செய்த கும்பல், வெள்ளிக் கிழமை இரவு உரையாற்றிய பின்னர் பினாங்கு சீன நகர மண்டபத்திலிருந்து புறப்பட்ட தியான் சுவாவின் வாகனத்தைத் தாக்கிய கும்பலுடன் ஒப்பிடுகையில் மிகவும் அமைதியாக இருந்தது.

லுனாஸுக்கு முன்னதாக அவர் புக்கிட் மெர்டாஜாம், கூலிம் ஆகியவற்றிலும் உரையாற்றினார். அங்கு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை.

என்றாலும் பக்காத்தான் ராக்யாட், செராமா நிகழும் இடங்களுக்கு தியான் சுவாவை பாதுகாப்புடன் தான் அழைத்துச் செல்கிறது.