13வது பொதுத் தேர்தலில் தாம் ஜோகூர் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பிஎன் கோட்டை எனக் கருதப்படும் அந்தத் தொகுதியில் தம்முடன் மோதுமாறு மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிற்கு சவால் விடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு பூச்சோங்கில் நடைபெற்ற டிஏபி செராமா ஒன்றில் அந்தச் சவால் விடுக்கப்பட்டதாக
சைனா பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவது பற்றி சுவா இன்னும் எந்த அறிவிப்பையும் செய்யவில்லை.
என்றாலும் தங்கள் சொந்தத் தொகுதிகளில் மோசமான சேவைகளை வழங்கியுள்ளதால் எதிர்க்கட்சித்
தலைவர்கள் தங்களது போர்க்களங்களை மாற்றிக் கொள்கின்றனர் என சுவா ஏற்கனவே குறை கூறியுள்ளார்.