சுலு சுல்தான் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் மூன்றாவது ஜமாலுல் கிராம் -ன் சகோதரர் இரண்டாவது எஸ்மாயில் கிராம்-மும் மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சபாவில் நிகழும் பூசல் குறித்து விவாதிக்கச் சந்தித்தாகச் சொல்லப்படுவதை சுலு சுல்தான் ஆட்சியகம் மறுத்துள்ளது.
இரண்டாவது இஸ்மாயிலும் சந்திக்கவே இல்லை என்னும் போது எப்படி பேச்சு நடத்தியிருக்க முடியும் என
அதன் பேச்சாளரும் தலைமைச் செயலாளருமான அபராஹாம் இட்ஜிரானி கூறினார்.
அந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாக கூறும்-இணையத்தில் வலம் வரும்- படங்கள் ஜோடிக்கப்பட்டவையாக இருக்க
வேண்டும் என அவர் சொன்னார்.
இழுபறி தொடங்குவதற்கு முன்பு ஜனவரி மாதம் கடைசி வாரம் இரண்டாவது எஸ்மாயில் சபாவுக்குச் சென்றார். அவர் செம்போர்ணாவில் மட்டும் தங்கினார். கோலாலம்பூருக்குப் போகவே இல்லை என இட்ஜிரானி தெரிவித்தார்.
என்றாலும் சபாவுக்குச் செல்லும் தமது திட்டத்தை மறு ஆய்வு செய்யுமாறு தமது சகோதரர் அஸ்ஸிமுடி என்ற அக்பிமுடின் கிராமை இரண்டாவது எஸ்மாயில் வற்புறுத்தினார் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
“இரண்டாவது எஸ்மாயில் பிரதமர் நஜிப்-உடன் பேச விரும்பினாலும் அவர் தரகராகச் செயல்படவில்லை. அத்துடன் நஜிப் அவரைச் சந்திக்க இணக்கம் தெரிவிக்கவும் இல்லை.”
இரண்டாவது எஸ்மாயிலுக்கும் பிரதமர் நஜிப் முன்னாள் அமைச்சர் அஜிஸ் சம்சுதீன் ஆகியோருக்கும்
இடையில் விவாதங்கள் நிகழ்துள்ளதாகக் கூறப்படுவது மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிகேஆர்
தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.
இண்டர் அக்சன்