சிவில் சமூக அமைப்புக்கள்: லஹாட் டத்து ஆர்சிஐ அமைக்க ஏன் அவசரம் ?

troopsபொதுத் தேர்தலுக்கு முன்னதாக லஹாட் டத்து ஊடுருவல் மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை   ஆணையத்தை அரசாங்கம் ஏன் வெகு வேகமாக அமைக்க முயலுகிறது என சிவில் சமூக அமைப்புக்கள்  கேள்வி எழுப்பியுள்ளன.

அத்தகைய ஆர்சிஐ அமைக்கப்படுவதை அவை ‘கொள்கை அளவில் வரவேற்றாலும்’ ஆர்சிஐ குறித்த திட்டமுன் அதன் பணிகள், ஆணையாளர்கள் பற்றிய விவரமும் ‘சந்தேகத்துக்குரிய முறையில்’ தயாரிக்கப்படுவது பற்றி கவலை தெரிவித்தன.

குறிப்பாக அந்த ஊடுருவல் பற்றிய விசாரணைகளை மலேசிய, பிலிப்பின்ஸ் அதிகாரிகள் இன்னும் முடிக்காத
வேளையில் ஆர்சிஐ-க்கு ஏற்பாடு செய்வது பற்றி அவை கவலை கொண்டுள்ளன.

45 சிவில் சமூக அமைப்புக்களும் 111 தனிநபர்களும் நேற்று விடுத்த கூட்டறிக்கையில் அவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் லஹாட் டத்து ஆர்சிஐ-யை அமைக்க காட்டும் அவசரம் அந்த விசாரணை அரசியல் நோக்கத்தைக்
கொண்டுள்ளதாக இருக்கக் கூடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவை கூறின.troops1

“நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என்பதால் ஆர்சிஐ-யை அமைப்பது என்பது பெரிய முடிவாகும். பராமரிப்பு அரசாங்க உணர்வுக்கு இணங்க நடப்பு அரசாங்கம் அந்த முடிவைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்,” என அந்த அறிக்கை கூறியது.

“விரைவில் 13வது பொதுத் தேர்தல் நிகழக் கூடும் என்பதால் ஆர்சிஐ-யிலிருந்து கிடைக்கும்- பகுதி அல்லது
தில்லுமுல்லு செய்யப்பட்ட- தகவல்கள் வாக்காளர்களைத் தவறாக வழி நடத்தி விடக் கூடும்.”

ஆர்சிஐ-யை அமைப்பதற்குப் பதில் பிலிப்பின்ஸுக்கும் மலேசியாவுக்கும் இடையில் நாடுகளுக்கு இடையிலான  ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என அவை யோசனை கூறின.

என்றாலும் இரண்டு நாடுகளிலும் தேர்தல் முடிந்த பின்னரே அது செய்யப்பட வேண்டும். அந்த ஆணையத்தில்
இரு நாடுகளையும் சேர்ந்த சிவில் சமூக பெருமக்கள் இடம் பெற வேண்டும்.

troops2Tenaganita, பெங் ஹாக்கிற்கான மலேசியர்கள், Solidariti Anak Muda Malaysia (SAMM) பெண்கள் உதவி நிறுவனம் (WAO), சுயேச்சை இதழியல் மய்யம் (CIJ), சுவாராம், அனைத்து மகளிர் நடவடிக்கைக் கழகம் (Awam) ஆகியவை அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள அமைப்புக்களில் அடங்கும்.

அந்த ஆர்சிஐ-யை அமைப்பு பற்றி நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவிப்பார் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலம் (Esszone) அமைக்கப்படும் தகவலை மட்டும் வெளியிட்டார்.

அது லஹாட் டத்து மீது ஆர்சிஐ-யை அமைப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பொருள்படாது என உள்துறை
அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் பின்னர் கூறினார்.