சபாவிலிருந்து வெளியேறும் பிலிப்பினோக்கள் எண்ணிக்கை 4,771ஐ எட்டியது

sabahசபாவில் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கும் சுல் சுல்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் இந்த மாதத்   தொடக்கத்தில் மோதல்கள் தொடங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ள பிலிப்பினோக்கள் எண்ணிக்கை   4,771-ஐ எட்டியுள்ளது.

பிலிப்பின்ஸ் தேசியப் பேரிடர் நிர்வாக மன்றம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

மார்ச் 28ம் தேதி வரையில் மொத்தம் 944 குடும்பங்கள் சபாவிலிருந்து வெளியேறி பாஸுல்டா (Basilan, Sulu,
Tawi-Tawi) பகுதியை வந்தடைந்துள்ளதாக அது தெரிவித்தது. அந்தக் குடும்பங்களுக்கு அரசாங்க உதவிகள்
வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த எண்ணிக்கையில் 2,861 முதியவர்களும் 1,860 பிள்ளைகளும் இருக்கின்றனர்.

சபாவில் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதாலும் ஆவணங்கள் இல்லாத அந்நியர்களையும் சுலு
சுல்தானுக்கு ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுகின்றவர்களையும் மலேசிய அதிகாரிகள் ஒடுக்கி
வருவதாலும் அங்கிருந்து வெளியேறும் பிலிப்பினோக்கள் எண்ணிக்கை கூடும் என அது எதிர்பார்க்கிறது.

இண்டர்அக்சன்.காம்