ஜோகூர் பிகேஆர் துணைத் தலைவர் டாக்டர் அகமட் பைடி சைடி மாநில இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.
ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் கட்சியின் பொது நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்ளத்
தவறியதைத் தொடர்ந்து அவர் அந்தப் பெறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அந்தத் தகவலை பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளர் ஸ்டீவன் சூங் இன்று உறுதிப்படுத்தினார். அவர் சுவாவின் நெருங்கிய தோழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் மாநில தொகுதித் தலைவர்கள் கூட்டத்தில் அந்த முடிவு
செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
“சுவா விடுமுறையில் இருக்கும் போது அவரது நிலையை முடிவு செய்வதை மத்தியக் குழுவிடம் விட்டு விடுவது என்றும் ஆனால் கட்சிப்பணியைத் தொடருவதற்காக இடைக்காலத் தலைவர் பொறுப்பை அகமட் ஏற்றுக் கொள்வது என்று அதில் முடிவு செய்யப்பட்டது,” என்றார் அவர்.
கட்சி அமைப்பு விதிகளின் கீழ் மாநிலத் தலைவர் இல்லாத வேளையில் துணைத் தலைவர் இடைக்காலத்
தலைவராக பொறுப்பேற்கலம்,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.