பினாங்கு புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சின் தொங், ஜோகூரில் உள்ள குளுவாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த தென் மாநிலத்தில் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அந்தக் கட்சியின்
மூத்த தலைவரும் ஈப்போ தீமோர் எம்பி-யுமான லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார்.
ஆகவே ஜோகூரில் களமிறங்கும் இரண்டாவது டிஏபி பிரமுகர் லியூ ஆவார்.
லிம் நேற்று நிகழ்ந்த செராமா ஒன்றில் ஈராயிரம் ஆதரவாளர்கள் முன்னிலையில் அந்தத் தகவலை
உறுதிப்படுத்தினார்.
புக்கிட் பெண்டேரா தொகுதியில் லியூ-வுக்குப் பதில் லிம்-மின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி
நிறுத்தப்படுவார். கடந்த தேர்தலில் லியூ அந்தத் தொகுதியில் கெராக்கானைச் சேர்ந்த சியா குவாங் சாய்-யை
16,112 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.
குளுவாங்கில் அவர் நடப்பு மசீச எம்பி ஹாவ் கோக் சூங்-கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என
எதிர்பார்க்கப்படுகின்றது. ஹாவ், உயர் கல்வித் துணை அமைச்சரும் ஆவார்.
அவர் குளுவாங் தொகுதியை 2008ல் டிஏபி வேட்பாளரை 3,781 வாக்குக்ளில் தோற்கடித்தார்.