குவான் எங், சாங் இயூ விடுத்த சவாலை ஏற்றுக் கொள்கிறார்

tengவரும் பொதுத் தேர்தலில் பாடாங் கோத்தா-வில் தெங் தம்முடன் மோதினால் தாம் சட்டமன்றத் தொகுதி  ஒன்றுக்கு மட்டுமே போட்டியிட வேண்டும் என தெங் சாங் இயாவ் விடுத்த சவால்களில் ஒன்றை ஏற்றுக்  கொள்வதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

அந்த மாநில பிஎன் தலைவர் மூன்று தவணைக் காலத்திற்கு வைத்திருந்த அந்தத் தொகுதியில்  போட்டியிடுவதற்கு தெங் ஒப்புக் கொண்டால் கட்சித் தலைமைச் செயலாளர் என்னும் முறையில் நாடாளுமன்றத்  தொகுதிக்கு போட்டியிட வேண்டிய தேவையை ஏற்கப் போவதில்லை எனத் தாம் டிஏபி உயர்  தலைமைத்துவத்திற்கு தெரிவிக்கப் போவதாக அவர் சொன்னார்.

டிஏபி ஆயர் பூத்தே கிளையின் 13வது பொதுத் தேர்தல் நடவடிக்கை அறையைத் தொடக்கி வைத்த போது லிம்
அந்த அறிவிப்பைச் செய்தார்.

தமக்கு எதிராக போட்டியிடுவதற்கு முன்னரே தெங் புதிய அபத்தமான நிபந்தனைகளை விதிப்பதின் மூலம்
பாடாக் கோத்தாவில் நேரடிப் போட்டியைத் தவிர்க்க முயலுவதாக அவர் மேலும் கூறினார்.

தமது பழைய பாடாங் கோத்தா தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதின் மூலம் தெங் துணிச்சலைக் காட்ட
வேண்டும் என்றும் அவர் எங்கு போட்டியிட வேண்டும் என அம்னோ சொல்வதை பின்பற்றக் கூடாது என்றார்
லிம்.

“தெங் பாடாங் கோத்தா-வில் போட்டியிட மறுத்தால் நான் அவருடன் இனிமேல் என்னுடைய நேரத்தை
வீணாக்க மாட்டேன். காரணம் அவர் சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுக்களில் ஈடுபடும் அம்னோவின்
கைப்பாவை என்பது தெரிந்து விட்டது.”

“நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் நான் போட்டியிடுவது எந்த வகையில் சட்ட மன்றத் தொகுதி ஒன்றில்
எங்களுக்கு இடையில் போட்டி நிகழ்வதை பாதிக்கும் என்பதும் எனக்குப் புரியவில்லை. அவரை நான்
என்னுடைய ஆயர் பூத்தே தொகுதிக்கு வருமாறு நான் கேட்கவில்லை,” என்றார் லிம்.

பினாங்கில் உள்ள பக்காத்தான் பிஎன் தலைவர்களுக்கு இடையில் போட்டி நிகழ அனுமதிக்கும் பொருட்டு
தமது பாடாங் கோத்தா தொகுதியை ஆயர் பூத்தே தொகுதிக்கு மாற்றிக் கொள்ள நடப்பு பாடாங் கோத்தா
சட்டமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில டிஏபி தலைவருமான சாவ் கோன் இயாவ் ஒப்புக்
கொண்டுள்ளதாகவும் லிம் தெரிவித்தார்.