டோங் ஜோங் கல்லூரியின் தரத்தை அரசாங்கம் உயர்த்துகிறது

dong jongநாடாளுமன்றத்தைக் கலைத்த மூன்று நாட்களுக்குப் பின்னர் பிஎன் பராமரிப்பு அரசாங்கம் டோங் ஜோங்-கிற்குச்  சொந்தமான நியூ எரா கல்லூரியை பல்கலைக்கழகக் கல்லூரியாக தரம் உயர்த்துவதற்கான அங்கீகாரக் கடிதத்தை  வழங்கியுள்ளது. அந்த அங்கீகாரம் மார்ச் இறுதியில் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான கடிதம் இன்று தான்  வெளியிடப்பட்டது.

வரும் தேர்தலில் சீன சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கான தேர்தல் தந்திரம் என அந்த நடவடிக்கை கூறப்படுவதை உடனடியாக பிஎன் மறுத்தது.

“அதற்கும் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது தற்செயலாக நிகழ்ந்தது,” என உயர் கல்வித் துணை  அமைச்சர் ஹாவ் கோக் சுங் கூறினார்.

அவர் அந்த ஒப்புதல் கடிதத்தை டோங் ஜோங் நிர்வாகத்திடம் வழங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அங்கீகாரக் கடிதம் கொடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட  போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.

நியூ எரா கல்லூரி தரத்தை உயர்த்துவதற்கான அனுமதியை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு பல நாட்கள்  முன்னர் மார்ச் 29ம் தேதி வழங்கினார். ஆகவே அது பராமரிப்பு அரசாங்க வழிகாட்டிகளை மீறவில்லை  என்றும் அது தார்மீக ரீதியில் தவறு இல்லை என்றும் அவர் சொன்னார்.dong jong1

நியூ எரா கல்லூரி அதன் தரத்தை உயர்த்துவதற்கான நிபந்தனைகளைக் கடந்த ஆண்டு இறுதியில் பூர்த்தி  செய்து விட்டதாகவும் அங்கீகாரம் வழங்க சில மாதங்கள் தேவைப்பட்டன என்றும் ஹாவ் தெரிவித்தார்.

காஜாங்கில் அமைந்துள்ள அந்தக் கல்லூரி டிப்ளோமா, இரட்டைக் கல்வித் திட்டங்களை வழங்குகின்றது,

பல்கலைக்கழகக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள இரண்டாவது சீன கல்லூரி இதுவாகும். ஜோகூரில் உள்ள Southern University College முதலாவதாகும்.