பேராக் தம்பூனில் தாம் போட்டியிடா விட்டால் பெர்மாத்தாங் பாவ்-ல் களமிறங்கப் போவதாக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அவர் இப்போது தமது தேர்வை இரண்டு தொகுதிகளாகக் குறைத்துக் கொண்டுள்ளார்.
தம்பூனில் தாம் போட்டியிடா விட்டால் பிகேஆர் கட்சியின் Srikandi பிரிவைச் சேர்ந்த (இளம் பெண்கள் பிரிவு) தலைவி சித்தி ஆயிஷா ஷேக் இஸ்மாயிலை அங்கு நிறுத்தப் போவதாக அவர் மேலும் கூறினார்.
தாம் பேராக்கில் போட்டியிட்டால் தாம் அங்கு முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரச்சாரத்தின் போது நாடு முழுவதும் பயணம் செய்ய முடியாது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
“நான் வேட்பாளர் நியமன நாளுக்கு மட்டும் வந்து விட்டு மற்ற மாநிலங்களுக்குப் பிரச்சாரம் செய்யப் போக
முடியாது,” என பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் உள்ள குபாங் செமாங்கில் 300 பேர் கலந்து கொண்ட
கூட்டத்தில் அவர் சொன்னார்.
பேராக்கில் தாம் போட்டியிடுவதை தமது மனைவி வான் அஜிஸா வான் இஸ்மாயில் கூட ஒப்புக்
கொள்ளவில்லை என்றார் அவர். தாம் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் அவர் விரும்புவதாக அன்வார்
தெரிவித்தார்.
“கடந்த காலத்தில் அவர்கள் உங்களுடன் இணைந்திருந்தனர். நீங்கள் பேராக்கிற்குச் செல்லக் கூடாது” என
வான் அஜிஸா சொல்வதாக அன்வார் கூறினார்.
பேராக்கில் தாம் போட்டியிட வேண்டும் என்ற யோசனை எப்படி எழுந்தது என்றும் அவர் அடுத்து
விளக்கினார்.
“அது வியூகமாகும். அங்கு நாங்கள் ஆதரவை வலுப்படுத்த விரும்பினோம்.”
பெர்மாத்தாங் தொகுதியில் தாம் போட்டியிடுவதாக இருந்தால் அதனை தாமான் பாவ்-வில் அறிவிப்பதாக
அன்வார் மேலும் கூறினார்.
“எனக்குச் சில மணி நேரம் கொடுங்கள். நான் தம்பூனைச் சேர்ந்தவர்கள் உட்பட சில தலைவர்களுடன் நான்
விவாதிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
அன்வார் பெர்மாத்தாங் பாவ்-வில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என அந்த பிகேஆர் மூத்த தலைவர்
அடிக்கடி தமது உரையின் போது கூட்டத்தினரைக் கேட்டார்.
அதற்கு அங்கிருந்தவர்கள் ஒரு மனதாக ‘ஆமாம்’ எனப் பதில் அளித்தார்கள்