லாபுவான் தொகுதிக்கு பாஸ்-பிகேஆருக்கிடையில் இழுபறி

1 pasலாபுவான் தொகுதி தனக்கே என்று பிகேஆர் அறிவித்த மறுநாள் பாஸ் அத்தொகுதிக்கான தனது வேட்பாளரை அறிவிக்க அத்தொகுதி யாருக்கு என்பதில் இரண்டுக்குமிடையில் இழுபறி நிலவுகிறது.

நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூட்டரசு பிரதேச பாஸ், லாபுவானில், லாபுவான் பாஸின் தகவல் தலைவர் அட்னான் முகம்மட் களமிறக்கப்படுவார் என்று அறிவித்தது. ஆனால், அதற்கு முன்பே பிகேஆர் அத்தொகுதி தனக்குரியது என்று கூறிக்கொண்டிருந்தது.

இரண்டுக்குமிடையில் இழுபறி  நிலவினாலும் அத்தொகுதியில் பிஎன்னுக்கு எதிராக பல்முனை போட்டி இருக்காது என்று கூட்டரசு பிரதேச பாஸ் ஆணையர் முகம்மட் நோர் முகம்மட் திட்டவட்டமாகக் கூறினார்.

1 azminஎனினும், பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி (இடம்) அங்கு பிகேஆர் போட்டியிடும் என அறிவித்தது ஏமாற்றமளிப்பதாக முகம்மட் தெரிவித்தார்.

2008 தேர்தலில் லாபுவானில் அம்னோவின் யூசுப் மஹால் 8,457 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அங்கு நிலவிய மும்முனை போட்டியில் பாஸ் வேட்பாளரால் 1.106 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைத்தான் பெற முடிந்தது. இரண்டாவது இடத்தைப் பெற்றவர் ஒரு சுயேச்சை வேட்பாளர்.

1 mustafaஇதனிடையே, லாபுவான் தொடர்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி (வலம்) யுடன் விவாதிக்கப்போவதாக அஸ்மின் கூறினார்.

பக்காத்தான் கட்சிகளுக்கிடையில் சாபா, சரவாக், ஜோகூர் ஆகியவற்றில் தொகுதிப் பங்கீட்டுச் சர்ச்சைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லைபோல் தெரிகிறது. இவ்வார இறுதியில் இவ்விவகாரத்துக்குத் தீர்வுகாணப்பட்டு திங்கள்கிழமை வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.