பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், தாம் பல ஆண்டுகளாக மந்திரி புசாராக இருந்த போதிலும் முக்கியமான தொலைக்காட்சி, வானொலி நிலையங்களில் தமக்கு இடம் கொடுக்கப்பட்டதும் இல்லை, தாம் செய்திகளை உருவாக்கினாலும் கூட நியாயமான அளவுக்கு இடம் கொடுக்கப்பட்டதும் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
“நிக் அஜிஸ் என வரும் போது கெட்ட செய்திகளே வெளியிடப்படுகின்றன. நல்ல செய்திகள் என வரும்
போது எதுவும் வெளியிடப்படுவது இல்லை,” என அவர் Bicara ini untuk Ilahi ( இந்த உரை இறைவனுக்கே)
என்னும் தமது புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கூறினார். ஷா அலாமில் இன்று அந்த நிகழ்வு நடைபெற்றது.
“இது ஜனநாயகம் அல்ல, இது தான் கம்யூனிசம்- வானொலியில் அவர்களுடைய குரல்கள் மட்டுமே
ஒலிபரப்பாகின்றன. தொலைக்காட்சியில் அவர்களுடைய முகங்கள் மட்டும் காட்டப்படுகின்றன. நல்ல வேளை இணையத்தில் பரப்பப்படும் விஷயங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை.”
பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் மீதான ஊடகத் தடை, ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக, நிகழ்வுகள் பற்றிய தங்கள் பதிப்புக்களை வலுவான கரத்தைக் கொண்டு மக்கள் மீது கட்டாயமாக திணிக்க ‘தீய’ அம்னோவும் பிஎன்- னும் மேற்கொள்ளும் முயற்சி என்றும் நிக் அஜிஸ் வருணித்தார்.
“ஜனநாயக வாக்களிப்பில் கட்டாயம் என்பது இருக்கக் கூடாது. தேர்வு செய்ய மக்கள் அனுமதிக்கப்பட
வேண்டும். அது pilihanraya (தேர்தல்), paksaraya அல்ல (வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்துவது) எனக்
குறிப்பிட்ட கிளந்தான் மந்திரி புசார், மக்கள் தங்கள் தலைவர்களைத் தெரிவு செய்வதற்கு உதவியாக
அவர்களுக்கு தகவல் கிடைப்பதற்கு போதுமான வாய்ப்பும் வசதியும் இடமும் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.