ஆய்வு: மே 5 தேர்தல் பிஎன் பக்காத்தானுக்கு இடையில் நெருக்கமான போட்டி

redzuanதேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் வேளையில் இரு தரப்புக்கும் மக்கள் ஆதரவு 40 விழுக்காட்டுக்கு  மேல் இருப்பது ஒர் ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.

மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக, தேர்தல் மய்யம் (Umcedel) மேற்கொண்ட அண்மையை கருத்துக்  கணிப்பில் அது தெரிய வந்தது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட ஏப்ரல் 4ம் தேதிக்கும் கடந்த சனிக்கிழமை வரைக்கும் அது மேற்கொண்ட  ஆய்வில் பக்காத்தான், பிஎன் கூட்டணிகளுக்கு இடையிலான வித்தியாசம் ஐந்து விழுக்காடாக இருப்பதாக
Umcedel இயக்குநர் பேராசிரியர் முகமட் ரெட்சுவான் ஒஸ்மான் கூறினார்.

ஆனால் அவர் எந்தக் கூட்டணி முன்னணியில் இருக்கிறது என்பதையும் அந்த Umcedel ஆய்வில் இரண்டு
கூட்டணிகளுக்கும் கிடைத்த உண்மையான விழுக்காட்டையும் சொல்ல மறுத்து விட்டார்.

‘முடிவு செய்யாத’ வாக்காளர்கள் விகிதம் கடந்த மார்ச் மாதம் 21 விழுக்காடாக இருந்ததுடன் ஒப்பிடுகையில்
இந்த மாதம் 9 விழுக்காடாகக் குறைந்துள்ளது.”

“முடிவு செய்யாத 21 விழுக்காடு வாக்காளர்களில் பெரும்பான்மையாக இருந்த சீன வாக்காளர்கள் இப்போது
யாருக்கு வாக்களிப்பது என்பதை பெரும்பாலும் முடிவு செய்து விட்டனர்.”

தேர்தல் தினத்தன்று ‘முடிவு செய்யாத வாக்காளர்’ விகிதம் பூஜ்யமாகி விடும் என நாங்கள் நம்புகிறோம்,”
என்றும் முகமட் ரெட்சுவான் சொன்னார்.