வசந்தகுமார்: இந்து சமயம் குறித்த பிஎன் வேட்பாளர் கருத்துக்கள் மீது மஇகா 12 நாட்களாக ஏன் மௌனம் ?

hinduஷா அலாம் தொகுதிக்கான பிஎன் வேட்பாளரை ஆதரிக்க வேண்டாம் என மஇகா விடுத்துள்ள வேண்டுகோள்  ‘சற்று கால தாமதமாக’ வந்துள்ளது என தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிகேஆர்  வேட்பாளர் வசந்த குமார் கூறுகிறார்.

பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த 12 நாட்களுக்குப் பின்னரே அந்தக் கட்சி  சுல்கிப்லியின் வேட்பாளர் நியமனம் மீது கருத்துத் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

“கடந்த 12 நாட்களாக மஇகா-வும் அதன் தலைவர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? அவர்கள்
எங்கே போனார்கள் ?” என அவர் வினவினார்.

“நஜிப் மஇகா தலைவர் ஜி பழனிவேல் எதிரில் அமர்ந்திருந்த போது தான் அந்த அறிவிப்பைச் செய்தார்.
அவர்களிடமிருந்து முணுமுணுப்புக் கூட இல்லை.”

“நாடு முழுவதும் உள்ள இந்திய வாக்காளர்கள் உண்மையில் ஆத்திரமாக இருக்கின்றனர் என்பதை உணர்ந்த
பின்னர் தான் அந்தத் தலைவர்கள் தங்கள் வாயைத் திறக்கின்றனர்,” என வசந்தகுமார் சொன்னார்.hindu1

மஇகா-வுக்கும் பிஎன் -னுக்கும் வாக்களிக்க வேண்டாம் என இந்தியர்களைக் கேட்டுக் கொள்ளும்  குறுஞ்செய்திகளும் காணொளிகளும் மின் அஞ்சல்களும் நாடு முழுவதும் பரவத் தொடங்கியதால் அவர்கள்  அச்சமடைந்துள்ளனர். அவர்கள் இப்போது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகின்றனர்,” என அவர்  மேலும் கூறினார்.

ஷா அலாமில் சுல்கிப்லியை ஆதரிக்க வேண்டாம் என இந்தியர்களை மஇகா உதவித் தலைவர் எம் சரவணன்  நேற்றுக் கேட்டுக் கொண்டது பற்றி வசந்த குமார் கருத்துரைத்தார். சரவணன் தாப்பா தொகுதிக்கான நடப்பு  பிஎன் உறுப்பினர் ஆவார். அந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அவர் பிஎன் சார்பில் மீண்டும்  களமிறங்கியுள்ளார்.