அன்வாரும் கிட் சியாங்கும் ‘வெளியே போகுமாறு கூறப்பட்டனர்’

anwarபினாங்கில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமும் ஜோகூரில் டிஏபி ஆலோசகர் லிம் கிட்  சியாங்-கும் நேற்றைய தனித்தனி நிகழ்வுகளின் போது வெளியே போகுமாறு கூறப்பட்டனர்.

பினாங்கு Masjid Jamek Teluk Bahang பள்ளிவாசலில் tazkirah (சுருக்கமான சமய உரை) வழங்க விரும்பிய
அன்வார் அங்கிருந்து வெளியேறுமாறு பள்ளிவாசல் குழுவினரால் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

அந்தச் செய்தியை இன்று உத்துசான் மலேசியா வெளியிட்டுள்ளது.anwar1

பள்ளிவாசலில் தொழுகை நடத்த வந்துள்ளவர்களுக்கு உரை நிகழ்த்த விரும்பிய அன்வார் நடவடிக்கை முழு
உறுப்பினர்களுக்கு திருப்தியாக இல்லை என்றும் அந்த ஏடு கூறிக் கொண்டது. அதனால் வெளியேறுமாறு
அன்வாரை குழு கேட்டுக் கொண்டது.

அன்வார் உதவியாளர்களில் ஒருவர் பள்ளிவாசல் குழுவை திட்டியதின் மூலம் முரட்டுத்தனமாக நடந்து
கொண்டதாகவும் தமது காலணிகளை கழற்றாமல் அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் என்றும் அம்னோவுக்குச்  சொந்தமான அந்த ஏடு மேலும் கூறிக் கொண்டது.

ஜோகூர் பாருவுக்கு அருகில் உள்ள தாமான் துன் அமினாவில் கேலாங் பாத்தா நாடாளுமன்ற வேட்பாளர் லிம்
பிரச்சாரம் செய்வதற்காக சென்ற pasar tani-யில் அமைந்திருந்த கடை ஒன்றிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்  கொள்ளப்பட்டார்.

பிஎன் டி சட்டைகளை அணிந்திருந்த மக்களும் ஆளும் கூட்டணியின் ஆதரவாளர்கள் எனக்
கூறப்பட்டவர்களும் அந்தக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள்
டிஏபி குழுவினரை நோக்கி கூச்சல் போட்டதுடன் அங்கிருந்து வெளியேறுமாறும் வீட்டுக்குச் செல்லுமாறும்
கூறினர்.

“நீங்கள் மலாய்க்காரர்களுக்கு உதவ விரும்புவதாக சொல்கின்றீர்கள்.”

பினாங்கில் உள்ள மலாய்க்காரர்களைப் பாருங்கள், என்ன நடந்தது ?” என ஒருவர் கேட்டதாக உத்துசான்
செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த சம்பவம் தொடர்பான காணொளி யூ டியூப் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.