பெரும்பாலோர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமையும் பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் விட சிலாங்கூரின் பராமரிப்பு மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை உயர்வாக மதிப்பதை ஆய்வு ஒன்று காட்டுகிறது.
சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) 1,015 பேரிடம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 63.1 விழுக்காட்டினர் காலிட்டின் தலைமைத்துவத்தை மதிப்பதாகக் குறிப்பிட்டனர்.
அதே வேளை அன்வாரை மதிப்பவர்கள் 58.4 விழுக்காட்டினர், நஜிப்பை மதிப்பவர்கள் 51.2 விழுக்காட்டினர்.
ஆய்வில் கலந்துகொண்டோரிடம் சிலாங்கூர் அரசின் மாதம் 20 கன மீட்டர் இலவசநீர் வழங்கு திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. 91 விழுக்காட்டினர் அதை வரவேற்றனர்.
unmai enakum மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை pidikum…
சிலாங்கூர் மறுபடியும் பாகாதான் பிடிக்கும்.
காலித் மிகவும் இயல்பாக பாகுபாடின்றி மக்களின் பிரச்சினைகளை அனுகக்கூடியவர். பகட்டோ, டாம்பிகமோ அல்லது பந்தாவோ இல்லாத மிகச்சிறந்த மாநில முதல்வர். அவர் தொகுதியில்தான் என் குடும்பத்தின் 5 வாக்குகளும் உள்ளன. அவர் எங்கள் தொகுதியின் வேட்பாளர் என்பதை நினைத்து மன மகிழ்ச்சி அடைகிறேன்.
பாஸ் கட்சியின் ஆதிக்க தலையீடு இல்லாமலும்,கட்சியின் நலனே முக்கியம் எனும் நோக்கத்துடன் போட்டிகள் இல்லாது பராமரிப்பு மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்மை மீண்டும் சிலாங்கூர் மந்திரி புசாராக நியமிக்க வேண்டும்.அவரே தகுதியானவர்.மேலும் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவர்களின் சேவையும் தொடரவேண்டும்.