‘பிஎன் வாக்காளர்களை விமானத்தில் கொண்டுவருகிறதா? நல்ல கற்பனை’

1 bnதேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களிக்க சாபாவிலிருந்து ஆள்களை விமானத்தில் அழைத்து வருவதாகக்  பிகேஆர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறியிருப்பதை அவரின் கற்பனை என்று சிலாங்கூர் பிஎன் வருணித்துள்ளது.

“அது அவர் மனம்போன போக்கில் செய்யும் கற்பனை. பரிதவிக்கும் நிலையில் உள்ள ஒருவரின் கூற்று”, என பிஎன் துணை தேர்தல் இயக்குனர் முகம்மட் ஸின் இன்று ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

1 bn1சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்ற, பிஎன் சாபாவிலிருந்தும் சரவாக்கிலிருந்தும் நிறைய வாக்காளர்களைத் திரட்டிக் கொண்டுவருவதாக காலிட்டும் (வலம்) சிலாங்கூர் பாஸும்  கூறிவருவது குறித்து கருத்துரைக்குமாறு கேட்டதற்கு அவர் இவ்வாறு கூறினார்.

“பெரிய எண்ணிக்கையில் வாக்காளர்களைத் திரட்டிக் கொண்டுவருவது” பெரும் முயற்சியாகும் என்று குறிப்பிட்ட முகம்மட் ஸின், அதைக் கமுக்கமாகச் செய்ய முடியாது என்றார்.

“அது ஏழு பட்டாளங்களைக் கொண்டுவருவதற்கு ஒப்பாகும். அவர்கள் கேஎல்ஐஏ அல்லது எல்சிசிடி-இல் வந்திறங்க வேண்டும். அங்கிருந்து அவர்களைக் கொண்டுவந்து வீடுகளில் வைக்க வேண்டும். இந்த ஏற்பாடுகள் நடப்பதை(சிலாங்கூரில்) பார்த்தீர்களா? இல்லையென்றால், அது அவருடைய கற்பனை என்பதைத்தான் காண்பிக்கிறது”, என்றாரவர்.