நீங்கள் சொல்வதற்கு ஆதாரத்தைக் காட்டுங்கள் என குவான் எங் முன்னாள் நீதிபதியிடம் சொல்கிறார்

noorகடந்த ஞாயிற்றுக் கிழமை பொதுத் தேர்தலில் சீன சமூகம் மலாய்க்காரர்களிடமிருந்து ‘அரசியல் அதிகாரத்தைக்  கைப்பற்ற’ முயன்றதாகத் தாம் சொல்லிக் கொள்வதற்கான ஆதாரத்தை முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி  முகமட் நூர் அப்துல்லா காட்ட வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக்  கொண்டுள்ளார்.

“தமது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை முகமட் நூர் காட்ட முடியுமா ?” என்று லிம் இன்று விடுத்த ஒர்  அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.

“மலாய்க்காரர்களுடைய சொத்துக்களையும் உரிமைகளையும் பறிமுதல் செய்யப் போவதாக மருட்டியுள்ள
அவரது கருத்துக்கள் பிஎன் -னில் உள்ள மலாய்க்காரர்களும் சீனர்களும் இந்தியர்களும் ஊழல்களை
முறியடிப்பதில் அடைந்துள்ள தோல்வியை மறைப்பதற்காக நடத்தப்படும் பெரிய நாடகம்,” என பினாங்கு
முதலமைச்சருமான அவர் சொன்னார்.

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆnoor1ணையத்தின் புகார்கள் குழுவில் அங்கம் பெற்றுள்ள முகமட் நூரின்  சாதனைகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“எம்ஏசிசி புகார் குழு உறுப்பினர் என்ற முறையில் அவர் என்ன செய்துள்ளார் ?” என லிம் வினவினார். ஊழலையும் பண அரசியலையும் முறியடிப்பதில் எம்ஏசிசி -யும் இசி என்ற தேர்தல் ஆணையமும்  அடைந்துள்ள ‘தோல்விகளை மறைப்பதற்கு’ இன வெறுப்பைத் தூண்டுவது தான் எளிதான வழி என்றும் லிம்  குறிப்பிட்டார்.

noor2“எம்ஏசிசி-யுடன் ஒத்துழைக்க மறுத்து, எம்ஏசிசி நேர்மையில்லாமலும் சுட்டித்தனமாகவும் நடந்து கொள்வதாகக்  குற்றம் சாட்டிய சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என ஏன் முகமட் நூர் வலியுறுத்தவில்லை ?” எனவும் லிம் கேள்வி எழுப்பினார்.

முகமட் நூர் விடுத்த அறிக்கைகளுக்காக அவர் மீது நடவடிக்கை எடுப்பதின் மூலம் ‘தனது ஒரே மலேசியா  நற்சான்றிதழை நிரூபிக்குமாறும்’ அவர் அம்னோவுக்கு சவால் விடுத்தார்.

“அம்னோ அதனைச் செய்யத் தவறினால் மலாய்க்காரர் அல்லாதார் ஆதரவைப் பெறத் தவறியதற்காக அது  மசீச-வையும் கெராக்கானையும் குறை சொல்லக் கூடாது. அதற்கு மாறாக மசீச, கெராக்கான் ஆகியவற்றின்  தேர்தல் தோல்விகளுக்கு அம்னோ முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்,” என லிம் சொன்னார்.