டிஏபி: லாபிஸில் 800 வாக்காளர்களுக்கு பிஎன் பணம் கொடுத்தது

லாபிஸ் நாடாளுமன்றத்  தொகுதியில் வாக்களிப்பு அறையில் வாக்கு வேட்டை,  ரொக்கப்பணம் வழங்குதல், மின் துண்டிப்பு,  வாக்களிப்பு மையத்தைசு சுற்றியுள்ள பகுதியில் பிஎன் சட்டைகளை அணிந்து திரிதல் போன்ற முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக ஏழு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

இதில் மோசமான குற்றம் எதுவென்றால் பணம் கொடுத்ததுதான். லாடாங் கெர்சாங்கிலும்  லாடாங் கிளேய்ரிலும் வாக்களித்து திரும்பிய  சுமார் 800 வாக்காளர்களுக்கு ரிம30-திலிருந்து ரிம50 வரை பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டிஏபி தன்னார்வலர்கள் தேர்தல் சட்டம் மீறப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு மைய தலைவரிடம் புகார் செய்தனர். ஆனால், உள்ளூர் மஇகா கிளைத் தலைவரான அவர், அப்புகார்களை ஒதுக்கித் தள்ளினார்.

ரொக்கப்பணம், சுங்கை கெர்சாங் தோட்ட வாக்களிப்பு மையத்துக்கு வெளியில் கொடுக்கப்பட்டதாக அத்தொகுதி டிஏபி வேட்பாளரான எஸ். இராமகிருஷ்ணன் கூறினார்.

“சுங்கை கெர்சாங் வாக்களிப்பு மையத்தில் தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிப்பதைத் தோட்ட அதிகாரிகள் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

labis“பேனாக்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அங்கு வாக்களிக்க பென்சில்கள்தான் பயன்படுத்தப்பட்டன”, என்று நேற்று லாபிஸிலிருந்து திரும்பிய இராமகிருஷ்ணன்  (இடம்), மலேசியாகினியிடம் தெரிவித்தார்..

மசீசவின் இளம் நிபுணர்கள் பிரிவின் தலைவர் சுவா டீ யோங்கிடம் குறுகிய வாக்குவேறுபாட்டில் தோல்வியடைந்த இராமகிருஷ்ணன்  ஏழு புகார்களையும் மலேசியாகினியிடம் ஒப்படைத்தார்.

30,000 ஹெக்டாரைக் கொண்ட சுங்கை கெர்சாங் தோட்டம், சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்மூட்டின் குடும்பத்தாருக்கு சொந்தமானது என்றாரவர்.

சுங்கை கெர்சாங் தோட்டத்தில் பரப்புரை செய்யவும் சுவரொட்டிகள் ஒட்டவும் டிஏபி ஆதரவாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

“மாற்றரசுக்கட்சி வேட்பாளர்களும்  ஆதரவாளர்களும் தோட்டத்தில் பரப்புரை செய்ய இடமளிக்கக்கூடாது என்றும் அவர்களை ஆதரிக்கக்கூடாது என்றும் தோட்டத்தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்”. இராமகிருஷ்ணன் 353 வாக்குகளில் சுவாவிடம் தோல்வி அடைந்தார்.