கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு, நான்காமாண்டு நினைவுநாள் எதிர்வரும் 17.05.2013 வெள்ளிக்கிழமை இரவு மணி 8.00 தொடக்கம் இரவு மணி 9.00 வரை தலைநகர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் செம்பருத்தி ஏற்பாட்டில் நடைபெறும்.
ஆக்கிரமிப்புக்கும் அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள தமிழ் உறவுகள், தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தவும் போரில் மடிந்த உறவுகளை நினைவுகூரவும் நீதியை நிலைநாட்டவும் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நினைவில் வாழும் நம் உடன் பிறந்தவர்களுக்கான நினைவு பிராத்தனையில் மலேசியாவில் உள்ள தமிழ் ஈழ உணர்வாளர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று நினைவு நாள் நிகழ்வுக்கு வருமாறு செம்பருத்தி கேட்டுக்கொள்கிறது.
நாள்: 17/05/2013
நேரம்: இரவு 8.00 – 9.00
இடம்: டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மண்டபம்
மேல் விவரங்களுக்கு : செம்பருத்தி – 03-26980622


























என் தொப்புள் கொடி உறவுக்காக நிச்சயம் வருவேன் !
ஈழத் தமிழர்களுக்கான இந்த நினவு நாள் மிக குறுகிய கால அவகாசத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த வருடம் ஒரு மாதத்திற்கு முன்னாலேயே அறிவித்து விடும்படி ஏற்பாட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.