பினாங்கு மலாய் காங்கிரஸ் (பிஎம்சி), அம்னோ தலைவர் ஒருவரே பினாங்கில் பிஎன் தலைவராக நியமிக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சி மட்டுமே 10 இடங்களை வென்றதையும் அதன் மலாய்க்காரர்-அல்லாத பங்காளிக் கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை என்பதையும் பார்க்கையில் இதுவே நியாயமான முடிவுமாகும் என்று அந்த என்ஜிஓ கூறியது.
நஜிப் அதைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிஎம்சி தலைவர் ரஹ்மாட் இஷாக் (இடம்) “அதைச் செய்ய இதுவே பொருத்தமான தருணமாகும்” என்றார்.
நஜிப்பே அதற்குத் தலைமையேற்பது பொருத்தமாக இருக்கும் என்றாரவர். “அதனால் மலாய் ஆதரவு மீண்டும் அம்னோவுக்குத் திரும்பும்”.
பினாங்கில் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழந்து வருவதாக ரஹ்மாட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பினாங்கில் பிஎன் உறுப்புக் கட்சிகளுக்கிடையில் ஒத்துழைப்பு உணர்வு (அதன் காரணமாக கெராக்கானுக்கு பிஎன் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டு வந்தது) என்பது இனியும் பொருந்தாது என்றாரவர்.
“நம் சீனத் தோழர்கள் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. ஏனென்றால் அதனால் அவர்களுக்குப் பயன் ஏதும் இல்லாமல் போய்விட்டது”.
மலாய்க்காரர்கள் தங்கள் வலிமையைப் பெருக்கிக்கொள்ள் வேண்டும்
இதன் தொடர்பில் மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோவுடன் தொடர்புகொண்டு பேசியதற்கு, “எனக்கு எதுவும் தெரியாது”, என்றார்.
தற்போது வெளிநாட்டில் இருப்பதாகக் கூறிய அவர், மாநிலத் தலைவர் பதவியையும் கெராக்கான் தலைமைச் செயலாளர் பதவியையும் துறப்பதாக கடிதம் கொடுத்து விட்டதாகக் கூறினார். “அவ்விவகாரம் குறித்து வேறு எதுவும் சொல்வதற்கில்லை”, என்றாரவர்.
சீனச் சமூகத்தினர் பிஎன்னை முற்றாக நிராகரித்துவிட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டிய ரஹ்மான், இனி அவர்களின் அனுதாபதைப் பெறும் முயற்சி வீண் என்றார்.
“கெராக்கானே முற்றாக புறக்கணிக்கப்பட்டு விட்டது. எனவே தலைமைப் பொறுப்பை அதற்குக் கொடுப்பது நியாயமாகுமா?”, என்றவர் வினவினார்.
பிறித்தாலும் குணத்தோர்கள்……..
சிலர் கூடியதால் …..
நஜிப் …
இவர்களிடம் பாடம் கேட்க
வேண்டிய நிலை !!