13வது பொதுத் தேர்தலில் மோசடிகளும் முறைகேடுகளும் பெரிய அளவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டுள்ள அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணி, ஜுன் மாத இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற பதவி உறுதி மொழி ஏற்புச் சடங்கை புறக்கணிக்குமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் பேராளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
“நாங்கள் இந்த வாரம் இயக்கத்தைத் தொடங்குவோம். நாடாளுமன்ற பதவி உறுதி மொழி ஏற்புச் சடங்கை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை பக்காத்தான் அரசியல் தலைவர்களிடம் வழங்குவோம்,” என அந்தக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஹாரிஸ் இப்ராஹிம் கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
இசி என்ற தேர்தல் ஆணையத்தின் தொழில் நிபுணத்துவம், நேர்மை, சுதந்திரம் குறித்த சந்தேகங்களும்
தேர்தல் மனுக்களும் தேர்தல் முடிவுகளை சந்தேகப்பட வைத்துள்ளதாக அவர் சொன்னார்.
பக்காத்தானும் கூட தேர்தல் மோசடிகளை ஆட்சேபித்து பல பேரணிகளை நடத்தியுள்ளது. ஆகவே
ஜுன் 24 நாடாளுமன்ற பதவி உறுதி மொழி ஏற்புச் சடங்கை புறக்கணிப்பது அதன் நிலையை
வலுப்படுத்தும் என்றும் ஹாரிஸ் கருதுகிறார்.
“என்னைப் பொறுத்த அவ்ரையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை இழக்கப்படும் என்ற
கேள்வியே எழவில்லை.”
“நடப்பு முறையின் கீழ் புத்ராஜெயாவை யார் ஆளுவது என்பதை நிர்ணயம் செய்வதில் 51 விழுக்காடு
வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்,” என ஹாரிஸ் மேலும் கூறினார்.
ஏன் அவசரம் ?
“இந்த அரசாங்கம் அங்கீகரிக்கப்படவில்லை, இது சிறுபான்மை அரசாங்கம், நீதிமன்றத்தில் வழக்குகள்
தொடுக்கப்பட்டுள்ளன, பெர்சே ஏற்பாடு செய்துள்ள மக்கள் பஞ்சாயத்து மன்றம் இன்னும்
நிறைவடையவில்லை,” என பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் கூறினார்.
“ஆகவே அந்தப் பிரச்னைகள் இன்னும் தேங்கியிருக்கும் வேளையில் நீங்கள் ஏன் அவசரமாக பதவி
உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் சடங்கை நடத்த வேண்டும் ?”
பிஎன் -னுக்கு 48 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ள வேளையில் பக்காத்தானுக்கு 51 விழுக்காடு
வாக்குகள் கிடைத்துள்ளதால் பிரச்னைகள் தீர்க்கப்படும் வரையில் பதவி உறுதி மொழி எடுத்துக்
கொள்ளும் சடங்கை நிறுத்தி வைக்க வேண்டும் என அருட்செல்வன் நம்புகிறார்.
புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடைமுறை பழைய காரை வாங்குவதைப் போன்றது என பிகேஆர்
தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் குறிப்பிட்டார்.
“நாங்கள் காரை வாங்க விரும்புகிறோம். ஆனால் கார் சேதமடைந்துள்ளது. அதனை முதலில்
வாங்குமாறு விற்பனையாளர் நம்மிடம் சொல்கிறார். அதாவது நாம் அதற்குப் பணம் செலுத்திய பின்னர்,
உரிமை மாறிய பின்னர் தாம் அதனைப் பழுதுபார்ப்பதாக கூறுகிறார்.”
“ஆனால் நாம் சொல்கிறோம்: நல்ல தோற்றத்தைப் பெற அதன் எந்திரத்தை பழுதுபாருங்கள், வர்ணம்
பூசுங்கள். நிச்சயம் காத்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.