‘பொய் சொல்லும் போலீஸ் அதிகாரிகளைத் தண்டியுங்கள்’

paariகோலாலம்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா உட்பட போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல அரசு சாரா அமைப்புக்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

தடுப்புக் காவல் மரணங்களுக்கான காரணங்கள் மீது முரண்பாடான அறிக்கைகளைப் போலீசார் வெளியிடுவது குறித்து அவை மகிழ்ச்சி அடையவில்லை. அத்தகைய முரண்பாடான அறிக்கைகளினால் போலீசார் மீதான பொது மக்கள் நம்பிக்கை சரிகிறது.

paari1எடுத்துக்காட்டுக்கு கூட்டரசுப் போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த என் தர்மேந்திரன் மரணமடைந்ததற்குச் சுவாசக் கோளாறுகள் காரணம் என கூ கூறியிருந்தார்.

ஆனால் வலுவாக தாக்கப்பட்டதால் தர்மேந்திரன் மரணமடைந்ததை கோலாலம்பூர் மருத்துவ மனை நோய்க்கூறு நிபுணர் கண்டு பிடித்துள்ளார்.

“முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவது… நீங்கள் அதனைச் சொல்லக் கூடாது,” என தடுப்புக் காவல் மரணங்கள் மீது போலீஸ் வெளியிட்ட அண்மைய அறிக்கைகள் பற்றிக் குறிப்பிட்ட போது
மஇகா வியூக இயக்குநர் எஸ் வேள்பாரி கூறினார்.

எட்டு அரசு சாரா அமைப்புக்களுக்கும் பிரதமர் துறை அமைச்சர் பால் லோ-வுக்கும் இடையில் இன்று காலை நிகழ்ந்த சந்திப்பின் போது அந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்து
கொண்டவர்களில் வேள்பாரியும் ஒருவர் ஆவார்.