மங்கோலியப் பெண் அல்தான்துயா ஷாரிபு கொலைவழக்கு விசாரணையை, வழுபடு விசாரணை என்று அறிவிக்க வேண்டும் எனப் போலீஸ் அதிரடிப் பிரிவின் முன்னாள் அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் மனுச் செய்துகொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதற்கு அரசுத் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
10 நாள்களுக்குள், மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் அபாண்டி அலி, லிண்டன் அல்பர்ட், தெங்கு மைமுன் துவான் மாட் ஆகிய மூவரும் சிருலின் வழக்குரைஞர்களுக்கு உத்தரவிட்டனர்.
மனு மீதான விசாரணை ஜூன் 24-இல் நடைபெறும்.
கமருல் ஹிஷாம் கமருடின் தலைமையில் செயல்படும் எதிர்தரப்பு வழக்குரைஞர் குழு பின்வரும் காரணங்களின் அடிப்படையில் மேல்முறையீட்டுக்கு மனு செய்கிறது:
– முதல் விசாரணையின்போது, தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரணியமும் வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடினும் செய்த சத்திய பிரமாணங்களால் தங்கள் கட்சிக்காரருக்கு எதிரான செய்திகள் பரப்பப்பட்டன என்ற அடிப்படையிலும்
-இந்த எதிர்மறையான செய்திகளையும் சத்திய பிரமாணங்களையும் வழக்கை விசாரணை செய்த நீதிபதியும் கண்டிருக்கலாம் – அது அவர் வழக்குமீது தீர்ப்பளிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற அடிப்படையிலும் மேல்முறையீடு செய்துகொள்கிறார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமருல், “எதிர்மறையான செய்திகள் பரப்பப்பட்டதன் விளைவாக (உயர் நீதிமன்றம்) பாரபட்சமாக தீர்ப்பளித்திருக்கும் அபாயம் உண்டு” என்றார்.
போங்கடா கொலைகாரனே வெளியே மந்திரியா இருக்கான்…அவனை பிடிக்க துப்பு இல்ல..மானங்கெட்ட மலேசியா அரசியல் இது
கொலையின் நோக்கம் இன்னும் புலப்பட வில்லையே ! ! ! ! !
உண்மை வெளிப்படும் போது குற்றவாளி சுய நினைவு இல்லாமல் தள்ளாடும் வயதில் இருப்பார்..பாவம், அப்பொழுது குற்றத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்….இதுதான் நம் Malaysia சட்டம்.