தேச நிந்தனை : ‘ஒடுக்குமுறை’ பற்றி ஐநாவுக்கு தெரிவிக்கப்பட்டது

adliதேச நிந்தனை, ஒன்று கூடும் சட்டங்களைப் பயன்படுத்தி ஆறு சிவில் சமூக  உறுப்பினர்களும் எதிர்க்கட்சி அரசியல் வாதிகளும் ‘தெரிவு செய்யப்பட்டு  வழக்குத்  தொடரப்பட்டதாக’ கூறப்படுவது தொடர்பான விவரங்கள் அண்மையில்  ஐநா-வுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் 23வது கூட்டத்தில்  சுவாராம் என்ற மனித உரிமைப் போராட்ட அமைப்பு, பினாங்கைத் தளமாகக்  கொண்ட அரசு சாரா அமைப்பான அலிரான் சார்பில் ‘கறை படிந்த பொதுத்  தேர்தலுக்கு எதிரான எல்லா எதிர்ப்புக்களையும் முறியடிப்பதற்கு’ 1948ம் ஆண்டு  தேச நிந்தனைச் சட்டமும் 2012ம் ஆண்டு அமைதியாக ஒன்று கூடும் சட்டமும் பயன்படுத்தப்படுவது பற்றி விளக்கமளித்தது.

பேச்சு, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் பாதுகாப்பு, மேம்பாடு மீதான ஐநா  சிறப்பு அனுசரணையாளர் Frank La Rue விடம் தெரிவிக்கப்பட்டதாக சுவாராம்  நிர்வாக இயக்குநர் நளினி எழுமலை ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

adli1மாணவர் போராளிகளான அடாம் அட்லி அப்துல் ஹலிம், சாப்வான் அவாங்,  அம்னோவை தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை (ABU) அமைப்பின்  தலைவர் ஹாரிஸ் இப்ராஹிம், பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, பாஸ்  உறுப்பினர் தம்ரின் கபார், சமூகப் போராளி ஹிஷாமுடின் ராயிஸ் ஆகியோர்

 மாதம் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டதை அவர்
குறிப்பிட்டார்.

அடாம் அட்லிக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மெழுவர்த்தி விளக்கு விழிப்பு  நிலையின் போது கைது செய்யப்பட்ட 18 பேர் பற்றியும் அவர் பேசினார்.

அரசியல் வன்முறைகள் எனக் கூறப்படுவது பற்றியும் 1950ம் ஆண்டுக்கான  ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவின் ‘அநீதி’ பற்றியும் ஐநா-வுக்கு விளக்கப்பட்டது  என்றும் நளினி சொன்னார்.

மலேசியர்களுடைய ஜனநாயக உரிமைகள் மீறப்படுவது தொடர்பில் சுவாராம் ஜெனிவாவில்  விளக்கமளிக்க எண்ணியிருந்த பல விஷயங்களில் அவை அடங்கும்.

அமைதியாக ஒன்று கூடுவது மீதான ஐநா சிறப்பு அனுசரணையாளர் மைனா  காய்-யை மலேசியாவுக்கு வருகை அளிக்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பு  சுவாராமுக்கு ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் நளினி சொன்னார். அரசாங்கம்  உறுதியான தேதிகளை வழங்க வேண்டும் என சுவாராம் நெருக்கும் என்றும் அவர்  தெரிவித்தார்.

TAGS: