ஜகார்த்தாவில் அன்வார், ஆனால் நஜிப்பைச் சந்தித்தாக கூறப்படுவதை மறுக்கிறார்

anwarபக்காத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு பாலியில்  இந்தோனிசிய அதிபர் பம்பாங் சுசிலோ யூதயோனோவைச் சந்தித்தார். அவர்  இன்று ஜகார்த்த்தாவில் இருக்கிறார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் இந்தோனிசியத் தலைநகரில் இப்போது இருக்கும்  வேளையில் அன்வாரும் அங்கு சென்றுள்ளது பல ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அன்வாரும் நஜிப்பும் சந்திக்கும் சாத்தியமில்லை என பிகேஆர் வட்டாரங்கள்  தெரிவித்தன. ஆனால் பிஎன் பக்கத்தான் தலைவர்களுக்கு இடையில் பரஸ்பர  நலன்களை விவாதிக்க சந்திக்கக் கூடும் எனப் பிரதமர் தரப்பிலிருந்து வதந்திகள்  வெளியாகியுள்ளன.anwar1

அன்வார் கூட நஜிப்பை தாம் சந்திக்கக் கூடும் என்பதை தமது டிவிட்டர்  பக்கத்தில் மறுத்துள்ளார்.

13வது பொதுத் தேர்தலில் மலேசிய வாக்காளர்கள் வழங்கும் தீர்ப்பை நஜிப்பும்  அன்வாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தேர்தலுக்கு முன்பு இரண்டு  தலைவர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட வகை செய்தவர் என ஆசிய வால்  ஸ்டீரிட் சஞ்சிகை குறிப்பிட்ட முன்னாள் இந்தோனிசிய துணை அதிபர் யூசோப்  கல்லாவுடன் கூட்டாக நிருபர்களைச் சந்திப்பதற்காக அன்வார் ஜகார்த்தா  சென்றுள்ளார் என பிகேஆர் வட்டாரம் ஒன்று கூறியது.

anwar2அன்வார் அந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக யூசோப் தெரிவித்தார் என அந்த  சஞ்சிகை தெரிவித்திருந்தது.

அன்வார் ஒப்பந்தத்தை மீறி விட்டார் எனத் தாம் கூறியதாகச் சொல்லப்படுவதை  யூசோப் இன்றைய நிருபர்கள் சந்திப்பில் மறுப்பார் என பிகேஆர் வட்டாரம்  தெரிவித்தது.

ஏதாவது ஒர் உடன்பாட்டை செய்து கொள்ள அன்வார் நஜிப்பை ஜகார்த்தாவில்  சந்திப்பார் எனச் சொல்வது வினோதமானது என்றும் அவ்வாறு செய்வது ‘மற்ற  பக்காத்தான் தலைவர்களுடைய முதுகிற்கு பின்னால்” செயல்படுவதற்கு ஒப்பாகும்  என்றும் அந்த வட்டாரம் கூறியது.

“அன்வார் உடன்பாடு செய்து கொள்ள விரும்பியிருந்தால் அதனை ஏற்கனவே  செய்திருக்க முடியும். ஏனெனில் அவரது எதிர்ப்பாளர்கள் பல சலுகைகளை வழங்க  முன் வந்துள்ளனர். அவற்றை அன்வார் நிராகரித்து விட்டார்.”

பாலியில் சுசிலோவும் அன்வாரும் சந்தித்த போது மே 5 தேர்தல்கள் பற்றியும்  விவாதிக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரம் குறிப்பிட்டது.