13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மையை எளிதாக அழிக்க முடிந்தது குறித்து தாம் மிகவும் ஏமாற்றமடைந்ததாக தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் சொல்கிறார்.
“என் வாழ்க்கையில் எது சோகமான கட்டம் எது என யாராவது கேட்டால் நான் ‘அழியா மை’ என்று தான் சொல்வேன்,” என அவர் சினார் ஹரியானுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறினார்.
என்றாலும் அந்த அழியா மை விவகாரம் வாக்காளர்கள் ஒரு முறைக்கு மேல் வாக்களிக்க வழி வகுத்து விட்டதாக இசி மீது பழி போடக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.
கடந்த பொதுத் தேர்தலில் அந்த மையைப் பயன்படுத்துவதற்கு முன்னர் பல முறை சோதனை செய்யப்பட்டதாகவும் அப்துல் அஜிஸ் சொன்னார்.
ஆமாம் ஆமாம் உனக்கு ஒண்ணுமே தெரியாது. காரணம் நீ ஒரு! பூம் பூம் மாடு!