போலீஸ் புகார் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமலாக்கம் செய்யப்படுவதற்கான நடவடிக்கை எதனையும் அன்றைய பிரதமர் அப்துல்லா படாவி நிருவாகம் மேற்கொள்ளுமேயானால் மலேசிய போலீஸ் படை கிளர்ச்சியில் ஈடுபடும் என்று 2006, மே மாதத்தில் மிரட்டியிருந்தது.
தற்போது, ஐபிசிஎம்சி அமைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் எழும்பியுள்ள புதிய கோரிக்கைக்கு எதிராக மலேசிய போலீஸ் படையின் உயர்மட்ட தலைவர்கள் இன்னொரு கிளர்ச்சிக்கு தயாராகுகின்றனரா என்று நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா வினவுகிறார்.
முன்பு விடுக்கப்பட்ட மிரட்டலின் காரணமாக ஐபிசிஎம்சிக்குப் பதிலாக வலுவற்ற இஎஐசி அமைக்கப்பட்டது.
இப்போது எழுந்துள்ள கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை போலீஸ் படையின் துணைத் தலைவர் முகமட் பாகிரி ஸினின் பேசியுள்ளதை டோனி புவா சுட்டிக் காட்டுகிறார்.
புதிய ஐபிசிஎம்சி மசோதா ஒன்றை பிரதமர் நஜிப் உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் டோனி புவா கோரியுள்ளார்.