ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிப்பதைக் கட்டாயப்படுத்த கூடுதல் தனக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவை என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.
ஆனால் அந்தக் கோரிக்கை அதிகாரம் தவறாகப் யன்படுத்தப்படுவதற்கு வழி வகுத்து விடலாம் என பிரதமர் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி கருதுகிறார்.
அதனால் எம்ஏசிசி-க்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படக் கூடாது என அவர் சொன்னார்.
“என்றாலும் அது என்னுடைய சொந்தக் கருத்து. ஊழல் ஏதுமில்லை என்றாலும் அது தவறாகப் பயன்படுத்தப்படக் கூடிய சாத்தியம் உள்ளது,” என்றும் நான்சி ஷுக்ரி சொன்னார்.
ஆமாம் ஊழல்வாதிகளுக்கு பள்ளிக்கூட ரோத்தானில் அடிக்க வேண்டும் மாறாக குற்றவாளிகளுக்கு கொடுக்கும் ரோத்தானில் அடிக்கக் கூடாது என்று சட்டம் போட்ட தே.மு. கட்சியின் மந்திரி சொல்லுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே! இவர்களா ஊழலை ஒழிக்கப் போகின்றவர்கள்? போடி, போடி போக்கத்தவளே!