‘இந்தியாவிலிருந்து வந்தார் இரண்டே ஆண்டுகளில் குடியுரிமை பெற்றார்’

1 sabahஇந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தவரான பீர் முகம்மட் காடிர்,  1984-இல் தம் உறவினருடன் சாபா வந்தார். இரண்டே ஆண்டுகளில் மலேசிய குடியுரிமை பெற்றார். பிறகு ரேலாவில் சேர்ந்தார். அரசாங்கம் குறைந்த வருமானம் பெறுவோருக்குக் கொடுக்கும் ரிம500 உதவித் தொகையையும் பெற்றார்.

“என் உறவினர் அடையாள அட்டை பெற உதவினார்”, என பீர் முகம்மட் சாபா அரச விசாரணை ஆணையத்திடம் கூறினார்.

சத்திய பிரமாணத்தை வைத்து அடையாள அட்டை பெற்றாறாம்.

1991-க்கு முன்பு ஒருவரிடம் சத்திய பிரமாணம் இருந்தாலே அவர் சாபாவில் பிறந்தவர்தான் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாம்.