அம்னோ ஆண்டுக்கூட்டத்தில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டி கூடாது என்று கூறப்படுவதை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் வரவேற்கிறார் என உத்துசான் மலேசியா கூறுகிறது.
போட்டி இல்லையென்றால் நஜிப் அப்துல் ரசாக் தலைவராகவும் முகைதின் யாசின் துணைத் தலைவராகவும் தொடர்ந்து இருப்பர்.
“போட்டி இருந்தால் அம்னோ பிளவுபடலாம். போட்டியில் ஒருவர் தோற்றால் அவர் கட்சியிலிருந்து விலகி இன்னொரு கட்சியைத் தொடங்கக்கூடும்.
“எனவேதான், போட்டி நடப்பதை நான் ஆதரிக்கவில்லை. மற்ற பதவிகளுக்குப் போட்டி இருக்கலாம்”, என்றாரவர்.