டிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தல்களில் வாக்குகளை எண்ணும் போது தவறு நிகழ்ந்துள்ளது மீது கூடுதல் ஆதாரங்களை ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் கோரியுள்ளது.
கணினிக் குளறுபடியா அல்லது ஏமாற்று வேலையா என்பதை உறுதி செய்ய கூடுதல் ஆதாரங்கள் தேவை என அதன் பதிவதிகாரி அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் கூறினார்.
“நாங்கள் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். கட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களுக்குக் கிடைத்த வாக்குகள் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று,” என அவர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த அந்தத் தேர்தலில் வாக்குகளை எண்ணும் போது தவறு ஏற்பட்டு விட்டது என்றும் அதற்கு தொழில் நுட்பக் கோளாறு காரணம் என்றும் டிஏபி கூறியுள்ளது.