வரவு செலவுப் பற்றாக்குறையை குறைக்கும் குழுவுக்கு பிரதமர் தலைவர்

budget2015ம் ஆண்டு வாக்கில் நாட்டின் வரவு செலவுப் பற்றாக்குறையை 3  விழுக்காட்டுக்குக் குறைப்பதற்கு முயற்சிகள் செய்யப்படும்.

அதற்கான வழிகளை காண்பதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  தலைமையில் ஒரு  குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சி வேகத்தைப் பாதிக்காமல் அந்த இலக்கை அடைவதற்கு  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நஜிப் சொன்னார்.

அவர் இன்று காலை புத்ராஜெயாவில் 2014 வரவு செலவுத் திட்டம் மீதான  கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசினார்.

அந்த புதிய குழுவில் அமைச்சர்களும் அரசாங்கத் துறைகளின் தலைவர்களும்  இடம் பெற்றிருப்பார்கள்.

2012ல் 4.5 விழுக்காடாக இருந்த வரவு செலவுப் பற்றாக்குறை இவ்வாண்டு நான்கு  விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் நஜிப் தெரிவித்தார்.