மெனாரா அம்னோ பற்றிய கேள்விகளுக்குப் பதில் தரக் கூடிய சரியான மனிதர் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் என பினாங்கு அம்னோ தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மான் கூறுகிறார்.
“காரணம் அந்தக் கட்டிடம் கட்டப்பட்ட நேரத்தில் துணைப் பிரதமராகவும்
பினாங்கு அம்னோ தலைவராகவும் இருந்தவர் அவர் தான்,” என்றார் ஒஸ்மான்.
“அவருக்கு எல்லாம் தெரியும். நாங்கள் அந்தக் கட்டிடத்தைப் பெற்றுக்
கொண்டோம். அவ்வளவு தான். அப்போது நாங்கள் எந்தப் பதவியிலும் இல்லை,” என்றும் அவர் சொன்னார்.
பினாங்கு ஜாலான் மெக்காலிஸ்ட்டரில் உள்ள மெனாரா அம்னோ கட்ட்டத்தின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கிக் கம்பி காற்று வேகமாக வீசிய போது சரிந்தது.
அந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பல கார்கள் சேதமடைந்தன.
அந்தக் கட்டிடத்துக்கான வரைபடம் 1997ம் ஜுலை 31ம் தேதி சமர்பிக்கப்பட்டது என்றும் ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக அதாவது 1995ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி கட்டுமானப் பணியைத் தொடங்குவதற்கான சிறப்பு அனுமதியை ஊராட்சி மன்றம் வழங்கியது என்றும் தஞ்சோங் எம்பி இங் வெய் எய்க் நேற்று கூறிக் கொண்டிருந்தார். பின்னர் 1998ம் ஆண்டு ஜுலை மாதம் 24ம்
தேதி திருத்தப்பட்ட கட்டிட வரைபடம் அனுப்பப்பட்டது.
சரி… பராமரிப்புக்கு யார் பொறுப்பு….. அதுக்கும் இன்றுவரை அவர்தான் பொறுப்பா.. போங்கடா மடப் பயல்களே….
ஒவ்வொரு மாதமும் அந்த இடி தாங்கியின் நட்டு உறுதியாக இருக்கிறதா என்று செக் பண்ணி கிரிஸ் தடவ அன்வார் தவறி விட்டார்.