பெரிதும் எதிர்பார்க்கப்படும் மஇகா தலைவர் தேர்தல் செப்டம்பர் 22ல் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கப்பதிவதிகாரி அலுவலக நிபந்தனைகளுக்கு ஏற்ப கட்சியின் எல்லாப் பதவிகளுக்கான தேர்தல் இவ்வாண்டுக்குள் நிகழும் என்று மஇகா தலைவர் ஜி பழனிவேல் தெரிவித்தார்.
அவர் இன்று கோலாலம்பூரில் மஇகா மத்திய செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
கட்சியின் துணைத் தலைவர், மூன்று உதவித் தலைவர்கள், 23 மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் நிகழும் என்றும் அவர் சொன்னார்.
எல்லா 3,900 மஇகா கிளைகளும் தங்கள் ஆண்டுக் கூட்டங்களை ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்றும் பழனிவேல் தெரிவித்தார்.
“தொகுதித் தேர்தல்கள் செப்டம்பர் இறுதியில் தொடங்கி அக்டோபர் வரை நிகழும் ,” என்றார் அவர்.
இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டால் தலைவர் என்ற முறையில் தமது கடைசித் தவணையாக இருக்கும் என்றும் பழனிவேல் அறிவித்தார்.
பெர்னாமா
முக்கியச் செய்தித் தலைப்புகள், உயர்ந்த பதவிகளில் ம இ கா போட்டி போடாது ,அப்படி போட்டி போட்டால் உயர்ந்த பதவியில் இருக்கும் அனைவருக்கும் ஊஊஊஊ தான்!
தேர்தல் முறையாக நடந்தால் நிறைய கிளை ,தொகுதி, மற்றும்இதர பதவிகளில் நிறைய மாற்றங்கள் நிகழும் என்பது நிச்சயம் . இந்த தேர்தலில் முதியவர்கள் இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி கொண்டால் நல்லது .
இந்திய மக்களால் உதறித் தல்லப்பட்ட கட்சி எப்போது தேர்தல் வைத்தால் என்ன ? “வால்டோர் அறிவாளிக்கு” கடுப்பு ஏறக்கூடாது !
இது கடைசி தவணை என்று சொல்லிவிட்டீர்கள்.அடுத்தத் தவணைக்காக இப்போதே சண்டையை ஆரம்பித்து விடுவார்கள் உங்களது பெருந்தலைவர்கள். இனி அடுத்தத் தவணை வரை ம.இ.கா.வில் எந்த வேலையும் ஓடாது! பாவம் நமது மாணவர்கள். நஜிப் சொன்ன வெறும் வாக்குறுதியை வைத்தே காலத்தை ஓட்டி விடுவார்கள் நமது ம.இ.கா.வினர்!