‘பாஸ் கட்சியும் அம்னோவும் தனித்தனி அமைப்புக்களாக இயங்க வேண்டும்’

Dzulபாஸ் கட்சி அம்னோவுடன் ‘ஒற்றுமைப் பேச்சுக்களை’ நடத்துவதை எதிர்க்கும்  கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டை கட்சியின்  மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர் சுல்கெப்லி அகமட் முழுமையாக ஆதரிக்கிறார்.

தேசிய அரசியலில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதற்கு பாஸ்
அம்னோவுக்கு வெளியில் இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

அம்னோ-பாஸ் ஒற்றுமைப் பேச்சுக்கள் பற்றிய ஊகங்கள் தொடரும் வேளையில்  சுல்கெப்லியின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

“மலாய்க்காரர்கள், முஸ்லிம்கள் ஒற்றுமை என்பதற்காக இரண்டு கட்சிகளும் ஒரே  அமைப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை.”Dzul1

“அத்தகைய ‘அரசியல் ஒற்றுமை’ வேறு வகையான கொடுங்கோன்மைக்கு வழி  வகுத்து விடலாம்,” என சுல்கெப்லி அஞ்சுகிறார்.

“அதிகார அத்துமீறலுக்கு அது வழிகோலக் கூடும். இஸ்லாம் உட்பட எந்த
சமயத்திலும் அது தவறாகும்.”

நாட்டில் வலுவான இரண்டு கட்சி அரசியல் முறையை வலுப்படுத்துவதற்கு  பக்காத்தான் ராக்யாட்டில் பாஸ் இணைந்துள்ள நடப்பு நடைமுறையை சுல்கெப்லி  ஆதரிக்கிறார்.