ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுவதை விசாரணை செய்துவரும் பிரெஞ்ச் நீதிமன்றம், தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்திய பிரமாணத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குரைஞர்களைத் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிகிறது.
அதில் ஒருவர், ஜூலை 19-இல் சுவாராம் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் கலந்துகொண்டு பிரெஞ்ச் நீதிபதிகள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதை எடுத்துரைப்பார் என ஸ்கோர்பியன் வழக்கு ஒருங்கிணைப்பாளர் பீட்டர் சோங்(இடம்) கூறினார். ஸ்கோர்பியன் வழக்குச் செலவுக்குப் பணம் திரட்ட அந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.