துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் பக்ரி ஸினின், சனிக்கிழமை பாடாங் மெர்கோக்கில் நடக்கும் பேரணியைத் தடுக்க முயலக் கூடாது என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.
அது ஓர் அமைதிப் பேரணி.போலீஸ் கட்டுப்படுத்துவதோ எச்சரிக்கை விடுப்பதோ கூடாது.
“அவர் அம்னோ தொகுதித் தலைவர்போல் பேரணிக்கு எதிராக கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது”, என்றாரவர்.
வேண்டுமானால் பேரணி தொடர்பில் துணை ஐஜிபி தங்களுடன் பேச்சு நடத்தலாம் என்றவர் சொன்னார்..
இது என்ன புதுக்கதை. போலிஸ் அதிகாரிகள் என்றும் ஆளும் கட்சியின் கூஜவாகவே இருக்க வேண்டும் என்பதுதானே எழுதாத சட்டம். பின்னே எப்படி அவைகள் உயிருடன் வாழ முடியும்?