உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி, தம்மைப் பதவி விலகச் சொல்லி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
“அமைச்சரை நியமிப்பதும் விலக்குவதும் பிரதமரின் விருப்பமாகும். அந்த அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு”.இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் ஜஹிட் இவ்வாறு கூறினார்.
ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக சிவில் வழக்கு தொடரப்பட்டிருப்பதை அடுத்து அவர் பதவி விலக வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
யாரும் உங்களை விலகச் சொல்லவில்லை. சிவில் குற்றத்தை மூடி மறைக்க முடியாத போது, போலிஸ் குற்றவியல் விசாரணை நடத்தாமல் இருப்பதற்கு யார் காரணம் என்று கொஞ்சம் சொல்லுங்கள் “உள்” துறை அமைச்சரே! நீங்களே பதவியை ராஜினாமா செய்தால் போதும். இதற்க்கு போய் ஏன் பிரதமரை சப்பைக் கட்ட அழைக்கின்றீர்கள்?
பிரதமர் உங்களை நீக்க மறுத்தாலும், நீதி மன்றம் உங்களை குற்றவாளி என கருதினாலும் ரிங்கிட் 2000க்கு மேல் அபராதம் கட்ட வைச்சாலும், நிங்கள் உங்கள் பதவியை இழக்க நேரிடும். வாய் ஜாலத்தை விட்டு மக்களுக்கு என்ன செய்வது என்று பாருங்கள். வரும் அம்னோ தேர்தல் உங்கள் தலை எழுத்தை மாற்றலாம்!